For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கிளைமாக்ஸ்"?.. பாசறைக்கு திரும்புங்க.. கிவ் நகரை சுற்றி வீரர்களை குறைக்கும் ரஷ்யா.. ஏன் என்னாச்சு?

உக்ரைன், ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வருகிறது

Google Oneindia Tamil News

துருக்கி: படைகள் குறைக்கப்படும் என்று சொல்லியிருப்பதை கூறியிருப்பதை, போர் நிறுத்தம் என்று கருதக்கூடாது என்றும், புதின் மற்றும் செலன்ஸ்கி இடையேயான நேரடி பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..!

Recommended Video

    Russia-Ukraine இடையேயான பேச்சுவார்த்தை என்ன ஆனது? | Oneindia Tamil

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் ஒருமுடிவுக்கு வராத நிலையில், இரு நாடுகள் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை துருக்கியில் நடைபெறுகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா விடாமல் போர் தொடுத்து கொண்டிருக்கிறது.. பல நாட்டு தலைவர்கள் அறிவுறுத்தியும், எச்சரித்தும் போரை ரஷ்யா நிறுத்தவில்லை..

    இந்த வெறித்தனமான தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் பேரழிவு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.. அப்பாவி மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு அந்நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

     திடீர் திருப்பம்! முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? படைகளைக் குறைக்க ரஷ்யா ஒப்புதல் திடீர் திருப்பம்! முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? படைகளைக் குறைக்க ரஷ்யா ஒப்புதல்

    முடிவு வருமா?

    முடிவு வருமா?

    இதற்கிடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் ராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது... உக்ரைனின் கீவ் நகர் அருகேயும், ஜெர்னிகிவ் நகரிலும் படைகளை குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் இருந்ததாக பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்த ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரஷ்ய படைகள்

    ரஷ்ய படைகள்

    சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது... இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளை குறைப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போரின் தீவிரம் குறையும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை... வெறும் இடமாற்றம் தான் செய்யப்படுகிறது என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.. மேலும், கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்யா அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

    ராணுவ நடவடிக்கை

    ராணுவ நடவடிக்கை

    கிவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்று அமெரிக்கா மேலும் கூறியுள்ளது.. சிறிய அளவிலான படைகள் மட்டுமே கிவ் நகரை விட்டு வெளியேறி உள்ளதாகவும், இது படைகளை இடம் மமாற்றும் உத்திதான் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, உக்ரைனின் இதர பகுதிகளில் கடுமையான மோதலே இனிமேல்தான் ஆரம்பம் என்றும் எச்சரித்துள்ளது.

    ரஷ்யா

    ரஷ்யா

    முன்னதாக, தலைநகர் கீவ், 2வது பெரிய கார்கிவ், லிலிவ் மற்றும் வர்த்தகம், துறைமுகம் பகுதியான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற ரஷ்யா, தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.. இதில், கெர்சன் நகரை மட்டும் முழுமையாக ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மற்ற நகரங்கள் சின்னாப்பின்னாமாகிவிட்டன.. இஸ்தான்புல்லில் ரஷ்ய மற்றும் உக்ரைன் தூதுக்குழுக்கள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    உக்ரைன்

    உக்ரைன்

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் சொல்லும்போது, உக்ரைனில் உள்ள கீவ், செர்னிவ் மீதான ராணுவ நடவடிக்கைகளை பல மடங்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.. ஆனால், ரஷ்யா சார்பில் பங்கேற்ற தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி சொல்லும்போது, "அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடந்துள்ளது... உக்ரைனின் கோரிக்கைகள் ரஷ்ய அதிபரிடம் வைக்கப்படும். அப்போது ஜெலன்ஸ்கியும், புடினும் சந்திக்கலாம்" என்றார்.. அதாவது, புடின் - ஜெலன்ஸ்கி இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.. அப்படி நடந்தால், இந்த போர் முடிவுக்கு வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    De-Escalation Not Ceasefire: Russia On Reducing Operations Around Kyiv
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X