For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவைத்தில் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய 15 இந்தியர்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் நாட்டில் தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியிருந்த 15 இந்தியர்களின் தண்டனையை, மன்னர் ஜாபர் அல் அஹ்மத், ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்

குவைத் நாட்டில், வேலை செய்த இந்தியாவைச் சேர்ந்த சிலர், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அங்கு சிறையில் உள்ளனர். மரண தண்டனை உள்ளிட்ட பல தண்டனைகளுக்கு உள்ளவர்கள் அவர்கள்.

Death sentences handed down to 15 Indians lodged in a Kuwaiti jail

அவர்களின் உறவினர்கள் தண்டனை குறைப்புக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசு குவைத் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய
நிலையில், குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத் 15 இந்தியர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். தவிர, 119 இந்தியர்களின் தண்டனையைக் குறைத்தும் அவர் உத்தரவு வழங்கியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குவைத் மன்னருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

English summary
Death sentences handed down to 15 Indians lodged in a Kuwaiti jail have been commuted to life imprisonment by the Emir of Kuwait.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X