சிகாகோவில் சிலிர்க்க வைத்த தீபாவளி கொண்டாட்டம்.. ஒரு "படபட" வீடியோ!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிகாகோவில் சிலிர்க்க வைத்த தீபாவளி கொண்டாட்டம்-வீடியோ

    சிகோகோ: நாம எல்லோரும் காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சு சாமி கும்பிட்டு பலகாரம் எல்லாம் படைத்து தீபாவளி டிவி நிகழ்ச்சிகள் ஒண்ணு விடாமல் வரிசையா பார்த்து அப்புறம் கறியும் வகை வகையா உணவும் சமைச்சு வயிறு நிறைய சாப்பிட்டு பட்டாசு வெடித்து அமர்க்களமான தீபாவளி கொண்டாடி முடிச்சாச்சு.

    நாம கொண்டாடி மகிழந்தது போலவே உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் கூட இதை சிறப்பாகவே கொண்டாடி முடித்துள்ளனர். ஒவ்வொரு தீபாவளியும் இந்திய மக்களுக்கு எங்கிருந்தாலும் விசேஷம்தான்.

    சரி அமெரிக்காவில் இருக்கிற நம்ம மக்கள் எப்படி தீபாவளி கொண்டாடறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

     விடுமுறை இல்லை

    விடுமுறை இல்லை

    தீபாவளி அன்று விடுமுறை எல்லாம் கிடையாது பாஸ் இங்க. அதனால் காலையில் குளியல் முடித்து சின்னதாக ஒரு பூஜையை முடித்து விட்டு காலையில் பள்ளி, ஆபிஸ் என்று ஓட்டம் எடுத்து விட்டு மாலை தான் ஆரம்பிக்கிறது கொண்டாட்டம் எல்லாம்.

     அழகாக ஒரு குடும்பம்

    அழகாக ஒரு குடும்பம்

    மாலையில் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்து முடித்து விட்டு வகை வகையான உணவுகளோடு வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். எங்கன்னு கேட்கறீங்களா. சொந்தங்கள் அருகில் இல்லா இவர்களுக்கு எல்லாம், நண்பர்களே சொந்தங்கள் ஆகிறார்கள். குறிப்பிட்ட இடங்களில் கூடி தாங்கள் செய்த அறுசுவை உணவு, பலகாரம் எல்லாம் கொண்டு வந்து பாட் லக் முறையில் பகிர்ந்து கொண்டு அழகாக ஒரு குடும்பம் போல கொண்டாடுகிறார்கள்.

     பாரம்பரிய உடைகள்

    பாரம்பரிய உடைகள்

    கட்டாயம் அன்று எல்லோரும் மேலை நாட்டு உடைகளுக்கு டாட்டா சொல்லி விட்டு சேலை, சுடிதார் என்று கலக்குகிறார்கள். ஆண்கள் வேட்டி குர்தா என்றும் குட்டிஸ் எல்லாம் கூட பட்டுப் பாவாடை, குர்தா என்று நம் ஊரு பாரம்பரிய உடைகள் அணிந்து கொண்டு ஜோராக வலம் வருகிறார்கள். அமெரிக்க மக்கள் நம் உடையை பார்த்து வாவ் நைஸ் என்று சொல்லிவிட்டு தான் நிச்சயம் கடந்து போகிறார்கள். நான் செய்தது கொஞ்சம் நீ செய்தது கொஞ்சம் என்று சொல்லி மாறி மாறி பலகாரத்தையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

     கம்பி மத்தாப்பு

    கம்பி மத்தாப்பு

    அது சரி வெடி வெடிப்பது எப்படின்னு கேக்கறீங்களா? சில அப்பார்ட்மெண்ட்ல கம்பி மத்தாப்பு மத்தாப்பு புஸ்வாணம் போன்ற லேசானவற்றை வெடிக்கலாம். அவ்வளவு தானா என்றால் இல்லை. அந்த அந்த ஊரில் உள்ள ஹிந்து சென்டர் என்று சொல்லக் கூடிய பெரிய கோவில்களில் எல்லோரும் கூடி ஒரு கவுண்டரில் பட்டாசு விநியோகம் பண்ணி அங்கேயே எல்லோரும் சேர்ந்து கம்பி மத்தாப்பு பட்டாசு கொளுத்தி ஜாலியா கொண்டாடுறாங்க.

    கலக்கலான வான வேடிக்கை

    அது மட்டுமில்ல தீபாவளி அன்றும் அந்த வார இறுதியிலும் கலக்கலான வான வேடிக்கை நடக்கிறது. நீங்களும் கண்டுகளிக்க அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரின் முக்கியமான ஒரு ஹிந்து கோவிலில் கொண்டாடிய தீபாவளி வானவேடிக்கை வீடியோ இதோ உங்களுக்கு.

    - Inkpena சஹாயா

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+