For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறுத்தது போதும்! இந்திய வீரரை விளாசி தள்ளிய "பேன்ஸ்".. மேட்சில் நடந்ததை கவனிச்சீங்களா? பறந்த மெசேஜ்

Google Oneindia Tamil News

கேப் டவுன்: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக ஆடி வரும் வீரர் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா வெற்றிபெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் பண்ட்தான்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அளவிற்கு இவர் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக ஆடுவது இல்லை. டி 20 போட்டிகளிலும் இவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

பிசிசிஐ பாரபட்சமா? ரிஷப் பண்டுக்கு சான்ஸ்.. சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு! கொந்தளிக்கும் ரசிகர்கள் பிசிசிஐ பாரபட்சமா? ரிஷப் பண்டுக்கு சான்ஸ்.. சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு! கொந்தளிக்கும் ரசிகர்கள்

பண்ட்

பண்ட்

கடந்த 11 சர்வதேச ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் 10 போட்டிகளில் பண்ட் மோசமாக சொதப்பி இருக்கிறார். இன்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 16 பந்துகள் பிடித்த அவர் வெறும் 10 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். கடந்த சில போட்டிகளில் அவர் அடித்த ஒருநாள் ஸ்கோர்கள் இவை.

15
11
6
6
3
27
20*
17
14
44
33*
24
14


இதில் ஒரு போட்டியில் 44 ரன்கள் அடித்ததை தவிர வேறு எந்த போட்டியிலும் இவர் சிறப்பாக ஆடவில்லை.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இவரிடம் இருக்கும் பிரச்சனையே இவரால் சரியாக பேட்டை பந்தோடு கனெக்ட் செய்ய முடியவில்லை. பந்தை இவரால் சரியாக கணிக்க முடியவில்லை. அவருக்கு பிட்னஸ் பிரச்சனையும் இருக்கிறது. உடல் எடை அதிகமாக இருப்பதால் சரியாக பந்தை கணித்து, அவரால் அடிக்க முடியவில்லை. கடந்த டி 20 உலகக் கோப்பையிலும் சரி, அதற்கு முன்பு நடந்த தொடர்களிலும் சரி, பண்ட் பார்ம் இன்றி தவித்து வந்தார். பண்டிற்கு தேவை எல்லாம் இப்போது ஓய்வுதான். அவர் உள்ளூர் போட்டிகளில் அதிகம் ஆட வேண்டும். விஜய் ஹசாரே, முஷ்டாக் அலி கோப்பை போன்ற தொடர்களில் ஆட வேண்டும்.

ரிதம்

ரிதம்

உள்ளூர் போட்டிகளில் பயமின்றி ஆடி அவர் ரிதத்தை மீட்டு கொண்டு வர வேண்டும். ஆனால் அவரை தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் தேசிய அணியில் எடுத்துக்கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடும் பண்ட் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சொதப்பி வருகிறார். 2019 உலகக் கோப்பை தொடரில் இருந்தே பண்ட் தொடர் வாய்ப்புகளை பெற்று வருகிறார். சஞ்சு சாம்சன் இடத்தில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பண்ட் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோசமாக சொதப்பி வருகிறார். இன்றைய பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்கள் விக்கெட் இழக்க கூடாது என்று நிதானமாக ஆடினார்கள்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் இந்த தொடரின் முதல் போட்டியில் நன்றாக ஆடியும் கூட அவரை அணியில் இருந்து அடுத்த 2 போட்டிகளில் நீக்கி உள்ளனர். சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருந்தும் பண்டிற்குத்தான் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இனி மீண்டும் அணியில் இடம்பெறுவதற்கு சஞ்சு சாம்சன் ஐபிஎல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். 2024 உலகக் கோப்பை போட்டிக்காக இவர் காத்திருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளிலும் கூட கடந்த 2 சீசனாக பண்ட் சரியாக ஆடவில்லை. கடந்த 2 சீஸனும் பண்ட்
மோசமாக சொதப்பினார். ஆனாலும் இவருக்கு இந்திய அணியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மெசேஜ்

மெசேஜ்

இன்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பண்ட் சொதப்பி உள்ளார். இதையடுத்து சஞ்சு சாம்சனுக்கு ஆதர்வாக் ரசிகர்கள் பலர் ட்விட்டரில் பிசிசிஐ அமைப்பிற்கு மெசேஜ் அனுப்பி வருகின்றனர். பண்ட் இனியும் அணியில் இருக்க கூடாது. பொறுத்தது போதும். பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும். மாறாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும். இன்று மைதானத்தில் அவர் மோசமாக திணறினார். பேட் பந்தை மீட் செய்யவே இல்லை. அந்த அளவிற்கு மிக மோசமாக ஆடினார். அவரை அணியில் இருந்து நீக்குவதே சரியாக இருக்கும். அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். சஞ்சு சாம்சனுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து உள்ளனர்.

English summary
Do fans want to remove Risabh Pant from Team India ODI and T20 format: What happened?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X