Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிங்கிள் டீ" விலை காஸ்ட்லி கார் ரேட்டை விட அதிகம்.. உலகின் காஸ்ட்லியான 'டீ' எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்ஜிங்: உலகின் மிக அரிதான தேநீர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் இந்த தேநீரை தயாரிக்க பயன்படும் தேயிலை எங்கு விளைகிறது? எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்து தெரியுமா?

முதல் இரண்டு விலையுயர்ந்த தேயிலைகள் சீனாவில்தான் பயிரிடப்படுகிறது. இந்த தேயிலை தூளின் விலை உலகின் 'காஸ்ட்லியான' காரின் விலையை விட அதிகம்.

இந்த தேயிலையை சீன அரசு தனது பொக்கிஷங்களில் ஒன்றாக பார்க்கிறது. அப்படி என்ன இதில் சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இது இந்த பூமியில் சீனாவில் மட்டும்தான் விளையும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

சீனா

சீனா

இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்களை கொண்ட தேயிலைகள்தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதில் முதல் இடத்தில் இருப்பது 'மஞ்சள் தங்க தேநீர் மொட்டுகள்' எனப்படும் தேயிலைதான். இந்த வகை தேயிலைகள் சீனாவின் புஜியான் மாகாணத்தின் வுயி மலைகளில் வளர்க்கப்படுகிறது. இங்கு நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப இது ஓரளவு வளர்கிறது. பூமியில் மற்ற பகுதிகளில் இந்த தேயிலை வளர்வதில்லை. எனவேதான் இந்த தேயிலையின் ஒரு கிலோ தூளின் விலை 1.2 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.10 கோடியாகும்.
இந்த விலையில் Bugatti Veyron எனப்படும் விலையுயர்ந்த காரையே வாங்கிவிடலாம்.

பாண்டா

பாண்டா

விலையுயர்ந்த தேயிலை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது 'Panda-Dung' தேநீர். என்ன பெயரை வித்தியாசமாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஆம் நீங்கள் நினைப்பது போலவே இந்த வகை தேயிலைகள் பாண்டா கரடியின் சானத்தால்தான் உருவாக்கப்படுகிறது. இந்த தேயிலைகள் தென்மேற்கு சீனாவில் வளர்க்கப்படுகிறது. ஆன் யான்ஷி என்பவர் இதனை தொழில்முறையாக வளர்த்து வருகிறார். பாண்டா கரடியின் சாணத்தை தேயிலை செடிக்கு உரமாக பயன்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தவரே இவர்தான். பொதுவாக பாண்டா சாணம் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருப்பதால் தேயிலைக்கு அதிக சத்துக்களை கடத்துகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.57 லட்சம் வரை விற்கப்படுகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

மூன்றாவது விலையுயர்ந்த தேயிலை சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தேயிலையிலிருந்து பெறப்படும் தேநீர் 'சீன பேரரசர்களின் தேநீர்' என்று அழைக்கப்படுகிறது. இதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இந்த வகை தேயிலைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெட்டப்படும். இது தங்க நிறத்தில் இருக்கும். இதனை வெட்ட தங்க கத்தரிக்கோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டுமல்லாது இது வெயிலில் உலர்த்தப்படும்போது இந்த இலைகள் மீது தங்க துகள்கள் தூவப்படுகின்றன. எனவேதான் இது விலையுயர்ந்ததாக இருக்கிறது. இந்த வகை தேயிலை தூள் கிலோ ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

 இந்தியா

இந்தியா

நான்காவதாக மிக விலையுயர்ந்த தேயிலை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் மகைபரி தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், இந்த தேயிலைகள் பௌர்ணமி இரவில் மட்டுமே வெட்டப்படுகின்றன. இதை எல்லோரும் வெட்டுவதில்லை. மாறாக நிபுணர்களை கொண்டு மட்டுமே வெட்டப்படுகிறது. இவ்வாறு வெட்டப்பட்டு உலர்த்தப்பட்டு பொடியாக்கப்பட்ட தேயிலை தூள் கிலோ ஒன்று ரூ.1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.

ஜப்பான்

ஜப்பான்

நான்காவதாக ஜப்பான் நாட்டில் விளையும் தேயிலையின் தூள் கிலோ ரூ.53 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை நாம் பார்த்த தேயிலைகள் மஞ்சள் நிறத்தில்தான் இருந்தது. ஆனால் இதிலிருந்து வேறுபட்டதுதான் இந்த ஜப்பான் நாட்டின் 'கியோகுரோ' தேயிலை. கியோகுரோ என்றால் 'முத்து பனி' என்று பொருள். இந்த வகை தேயிலைகள் பச்சையாக இருக்கும். பழுத்த பின்னரும் பச்சையாகதான் இருக்கும். எனவேதான் இந்த வகை தேயிலைகள் ஜப்பானில் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. 1835ம் ஆண்டிலிருந்து இது பயிரிடப்பட்டு வருகிறது.

அப்புறம் என்ன.. ஒரு டீ சாப்பிடுவோமா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+