For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிபோதையில் உபேர் டிரைவரை தாக்கிய இந்திய வம்சவளி பெண் டாக்டர் டிஸ்மிஸ்

Google Oneindia Tamil News

மியாமி: அமெரிக்காவில் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரைத் தாக்கிய இந்திய வம்சவாளி பெண் டாக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மயாமி நகரில் டாக்டராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஸ்ஸான் (30). கடந்த ஜனவரி மாதம் அவர் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரை வம்பிழுத்து, தாக்குவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Drunk woman Indian-origin doc who attacked Uberdriver fired

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நீண்ட விடுமுறையில் போய் விட்டார் அஞ்சலி. தற்போது அவர் பணியை விட்டு அவர் வேலை பார்த்து வந்த ஜாக்சன் மருத்துவ மையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தனது நீக்கத்தை எதிர்த்து அவர் அப்பீல் செய்யலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் வேலை பார்த்த வந்தார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்சி டிரைவர் மற்றும் அவரது காரைத் தாக்கியது குறித்த வீடியோ வெளியான பின், அஞ்சலிக்கு எதிராக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இதனால் தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

English summary
30-year-old Indian-origin doctor at a US hospital has been fired after a video that showed her attacking a hapless Uber driver and his vehicle in Miami went viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X