For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மகன் மாரடைப்பால் மரணம்! அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34.

ஐக்கிய நாடுகளின் பிரதமரும், துணைக் குடியரசுத் தலைவரும், துபாயின் மன்னருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்துமின் மூத்த மகன், ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும். 34 வயதான இவர் குதிரையேற்றம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

Dubai ruler son Shaikh Rashid dies of heart attack

மாரடைப்பு காரணமாக, இன்று காலை அவர் மரணத்தை தழுவினார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் நாடுகளில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

"நாங்கள் அல்லாவுக்கு உரித்தானவர்கள், அவரிடமே திரும்ப வேண்டியவர்கள்" என்று துபாய் மன்னர் அலுவலகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
Shaikh Rashid Bin Mohammad Bin Rashid Al Maktoum died of heart attack on Saturday. He was 34. A three-day mourning period has been declared in Dubai. UAE flags will be flown at half mast during the mourning period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X