For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எபோலா தாக்கம்: 10 லட்சம் மக்களை தனிமைப்படுத்திய சியர்ரா லியோன் அரசு

By Siva
Google Oneindia Tamil News

ப்ரீடவுன்: எபோலா வைரஸ் அதிவேகமாக பரவுவதால் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியர்ரா லிலோயனில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் நாளுக்கு நாளுக்கு வேகமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 2, 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதே வேகத்தில் வைரஸ் பரவினால் நவம்பருக்குள் 20 ஆயிரம் பேர் எபோலாவால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்து.

இந்நிலையில் எபோலா பரவும் சியர்ரா லியோனில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எல்லை

எல்லை

கினியாவின் எல்லையோரம் உள்ள சியர்ரா லியோன் பகுதிகளில் வசிப்போர் ஊரை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.

தடை நீடிப்பு

தடை நீடிப்பு

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மேலும் 3 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அந்த பகுதி மக்கள் ஊர்களை விட்டு வெளியே செல்லவோ, வெளியாட்கள் ஊருக்குள் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

சியர்ரா லியோனில் உள்ள 14 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எபோலா வைரஸ் பரவுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று அந்நாட்டு அதிபர் எர்னஸ்ட் பாய் கொரோமா தெரிவித்துள்ளார்.

50 பைசா

50 பைசா

ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களில் பலர் பரம ஏழைகள். அவர்கள் நாள் ஒன்றுக்கு அதிகமாக செலவு செய்வது 50 பைசா மட்டுமே. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அவர்கள் உணவுக்கு வழியின்றி பசியால் துடித்து வருகிறார்கள்.

உதவுங்களேன்

உதவுங்களேன்

உலக உணவு ப்ரோகிராமில் இருந்து சியர்ரா லியோனுக்கு மேலும் உதவி செய்ய வேண்டும். அவர்கள் இங்கு பசியால் வாடும் மகக்ளுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்ட்ரீட் சைல்ட் தெரிவித்துள்ளது.

English summary
Sierra Leone has quarantined more than one million people to prevent the spread of Ebola virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X