For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் போலீசாரை படுகொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் வன்முறையில் வெடித்தது. இதில் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

Egypt sentences 529 Morsi supporters to death

இது தொடர்பாக போலீசார் ஆயிரக்கணக்கான மோர்சி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். எகிப்தின் மின்யா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 16 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

ஒரே வழக்கில் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது எகிப்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A court in southern Egyptian has convicted 529 supporters of ousted Islamist President Mohammed Morsi, sentencing them to death on charges of murdering a policeman and attacking police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X