For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து விமானத்தை கடத்தியது நான் இல்லைங்க: பேராசிரியர் சமஹா பேட்டி

By Siva
Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்து விமானத்தை தான் கடத்தவில்லை என்றும், தான் அதில் பயணம் மட்டுமே செய்ததாகவும் அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக பேராசிரியர் இப்ராஹிம் சமஹா தெரிவித்துள்ளார்.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் கெய்ரோவுக்கு கிளம்பிய எகிப்து ஏர் நிறுவன விமானத்தை எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) சைப்ரஸுக்கு கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக தரையிறக்க வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் விமானத்தை கடத்தியது அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக பேராசிரியர் சமஹா இல்லை என்றும், அது சயிப் எல் தின் முஸ்தபா என்றும் எகிப்து அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமஹா கூறுகையில்,

நானும் எகிப்து ஏர் விமானத்தில் பயணம் செய்தவன், அதை கடத்தியவன் அல்ல. விமானத்தில் ஏறியதும் சிப்பந்திகள் எங்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். உள்நாட்டில் பயணம் செய்ய எதற்கு இப்படி செய்கிறார்கள் என்று வியந்தோம்.

திடீர் என விமானம் அதிக உயரத்தில் பறந்ததை உணர்ந்தோம். அதன் பிறகே நாங்கள் சைப்ரஸுக்கு செல்வது தெரிய வந்தது. விமானத்தில் ஏதோ பிரச்சனை என்று சிப்பந்திகள் முதலில் தெரிவித்தனர். அதன் பிறகே விமானம் கடத்தப்பட்டது தெரிந்தது என்றார்.

English summary
A picture of EgyptAir flight hijacker Ibrahim Samaha has gone viral on social media. Buzz is that he is a professor at Alexandria university.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X