For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெட்டிப் போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் மனித ரோபோ…

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: டெர்மினேட்டர், எந்திரன் போன்று மனித உருவிலான ரோபோவை உருவாக்கியுள்ளனர் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள்.

மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகவும், தொழிற்சாலைகளில் மனித இழப்புகளை குறைப்பதற்காகவும், கடினமான வேலைகளை செய்யவும் ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.

உலகில் பல்வேறு விதமான வடிவங்களில் ரோபோக்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மனித வடிவிலான ரோபோ மிகப்பெரிய சாதனை என்றே விஞ்ஞான உலகில் கொண்டாடப்படுகிறது.

மனித ரோபோ

மனித ரோபோ

டெர்மினேட்டர் ஹாலிவுட் படத்தில் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் இயந்திர மனிதனாக நடித்திருப்பார். அதுபோன்ற அமைப்பிலான மனித ரோபோ ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

காயங்கள் சரியாகும்

காயங்கள் சரியாகும்

இதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.தனது உடலில் காயங்களோ அல்லது கோளோரோ ஏற்பட்டால் அதை அந்த ரோபோவே 2 மணி நேரத்தில் சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது.

வெட்டியதும் ஒட்டியது

வெட்டியதும் ஒட்டியது

தாங்கள் உருவாக்கிய இந்த ரோபோவை ரேஷர் பிளேடால் 2 துண்டுகளாக வெட்டி போட்டனர். ஆனால் 2 மணி நேரத்தில் அதை தானே 'ரோபோ' சரி செய்து ஒட்டிக்கொண்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உலோகக் கலவை

உலோகக் கலவை

இது மிமெடிக் என்ற உலோக கலவையினால் ஆனது. இந்த உலோக கலவையை எலெக்ட்ரிக் பொருட்கள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் உதிரி பாகங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.

பலம் வாய்ந்த எந்திரன்

பலம் வாய்ந்த எந்திரன்

இந்த ரோபோ பலம் வாய்ந்த எந்திரன் என்று கூறும் விஞ்ஞானிகள் மனிதர்களின் தினசரி வாழ்க்கையில் இது முக்கிய பங்காற்றும் என்று கூறியுள்ளனர்.

காதல் செய்யுமா?

காதல் செய்யுமா?

'எந்திரன்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரோபோவாக நடித்து இருப்பார். அந்த ரோபோவிற்கு உணர்ச்சிகளை ஏற்படுத்துவதன் மூலம், கோபம், காதல் போன்ற உணர்வுகள் ஏற்படுவதைப் போல செய்திருப்பார். ஆனால் ஸ்பெயின் விஞ்ஞானிகள் உருவாக்கிய ரோபோ தொழிற்சாலைகளில் பணிபுரியும், காதலிக்க எல்லாம் தெரியாது... ஐஸ்வர்யா மாதிரியான பெண்ணைப் பார்த்தாம் முத்தமெல்லாம் கேட்காதாம்.

English summary
IT’S an idea straight out of the Hollywood blockbuster Iron Man, but wearable robotic suits could be coming to everyday workplaces as part of an ambitious venture to reduce injuries. Scientists from across Europe are working on the Robo-mate project, which plans to test an artificial exoskeleton which can be worn by factory employees within three years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X