பெற்ற மகனை கொன்றவனை கட்டிப்பிடித்து அழுத தந்தை.. தண்டனை வேண்டாம் என நெகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நெகிழ்ச்சி! பெற்ற மகனை கொன்றவனை கட்டிப்பிடித்து அழுத தந்தை..வீடியோ

  வாஷிங்டன்: அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றிருக்கான தீர்ப்பு நேற்று வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. பலரால் கவனிக்கப்பட்டு வந்த இந்த கொலை வழக்கில் 'அலெக்ஸாண்டர் ரெல்போர்ட்' குற்றளவாளியாக அறிவிக்கப்பட்டார்.

  இவர் சில நாட்களுக்கு முன்பு அப்துல் முனிம் என்பவரின் மகனை கொன்றதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு 31 வருடம் சிறை வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்த நிலையில் நீதிபதிகள் இந்த தீர்ப்பை வாங்கியவுடன் அப்துல் முனிம் சென்று அந்த கொலையாளியை கட்டிப்பிடித்து கதறி அழுது இருக்கிறார். மேலும் அவரை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

   அப்துல் முனிம் மகன் கொலை

  அப்துல் முனிம் மகன் கொலை

  வாஷிங்டனின் கெண்டகி நகரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் சில நாட்களுக்கு முன்பு பட்ட பகலில் கொலை ஒன்று நடைபெற்றது. சலாஹுதீன் என்ற நபர் இந்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது வயிற்றில் குத்தப்பட்ட கத்தி கூட எடுக்கப்படாமல் அப்படியே அப்பார்ட்மெண்ட் தரையில் படுத்தக் கிடந்தார். இந்த கொலை வாஷிங்கடனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   பல நாள் விசாரணை

  பல நாள் விசாரணை

  இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தபட்டர்வர்கள் என கூறப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கத்தியில் எந்த கை ரேகையும் இல்லாத காரணத்தால் போலீசார் இந்த கொலை வழக்கை நிரூபிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கில் 'அலெக்ஸாண்டர் ரெல்போர்ட்' என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

   3 வருடம் அளிக்கப்பட்ட தண்டனை

  3 வருடம் அளிக்கப்பட்ட தண்டனை

  பல நாட்களாக நடந்த இந்த விசாரணையின் முடிவில் அலெக்ஸாண்டர் ரெல்போர்ட் தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டார். மேலும் அவருடன் கொலை செய்ததாக கூறப்பட்ட மற்ற இரண்டு பேரும் குற்றமற்றவர்கள் என்று முடிவானது. இதையடுத்து அந்த நபருக்கு 31 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை கேட்டவுடன் அந்த நபர் கதறி அழுதார்.

   கட்டிப்பிடித்த தந்தை

  கட்டிப்பிடித்த தந்தை

  நீதிபதிகள் இந்த தீர்ப்பு வழங்கியதும் கொலை செய்யப்பட்ட சலாஹுதீனின் தந்தை அப்துல் முனிம் சத்தமாக அழ ஆரம்பித்தார். மேலும் உடனிடியாக எழுந்து சென்று அந்த கொலையாளியை கட்டிப்பிடித்தார். அப்போது அவர் அழுதுகொண்டே ''என் மகனை கொலை செய்ததற்காக உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. உன்னை மன்னித்துவிட்டேன். நீ புதிய வாழ்க்கையை வாழ தொடங்கு என்று கூறினார். இதை கேட்ட அந்த கொலையாளி ''என்னை மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள்'' என கூறி நீதிமன்றத்தில் சத்தமாக அழுதுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Father Hugs a man who involved in his son's killing in America. He said to the court that he has forgive him for what he did.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற