"இனியும் நடுநிலை இல்லை!" உக்ரைன் பாதையில் பின்லாந்து.. நேட்டோவில் இணைய திட்டம்? அதிர்ந்து போன ரஷ்யா
ஹெல்சின்கி: உக்ரைன் போருக்குப் பின்னர் நேட்டோ பெசுபொருளாதாக மாறி உள்ள நிலையில், இதில் இணைவது தொடர்பாக ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது.
கடந்த பிப். இறுதியில் தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்த உக்ரைன் போர் தொடங்க பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் முக்கியமானது நேட்டோ தொடர்பானது.
சோவியத் ஒன்றியம் இருந்த போது அதன் விரிவாக்கத்தைத் தடுக்கும் வகையில் வட அட்லாண்டிக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட உறுப்புகள் நாடுகள் உள்ளன.

நேட்டோ
அதேபோல முன்னாள் சோவியத் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகியவையும் நோட்டை அமைப்பில் இணைந்து இணைந்தன. இந்த நேட்டோ அமைப்பில் இணையத் தான் உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோ அமைப்பும் கடந்த சில ஆண்டுகளாகவே உக்ரைன் உடன் நெருக்கம் காட்டி வந்தது. நேட்டோ படைகள் உக்ரைனில் வந்தால் அது தனகு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதாலேயே உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்கினார் புதின்.

பின்லாந்து
இந்தச் சூழலில் மற்றொரு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. வடகிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பின்லாந்து சுமார் 1,300 கிலோமீட்டரை ரஷ்யா உடன் பகிர்ந்து கொள்கிறது. 55 லட்சம் மக்களைக் கொண்டு சிறிய நாடான பின்லாந்து இதுவரை நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. ஆனால், உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

இரட்டிப்பான ஆதரவு
உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னர் வெறும் 30% பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம் உக்ரைன் போருக்குப் பின்னர் இது இரண்டு மடங்கு உயர்ந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறி வரும் நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.

விரைவில் முடிவு
பின்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தேசியப் பாதுகாப்பு மறு ஆய்வு அறிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டு நேட்டோ அமைப்பில் இணையலாமா வேண்டாமா என்பதைப் பின்லாந்து எம்பிக்கள் முடிவு செய்ய உள்ளனர். இது குறித்து பிரதமர் சன்னா மரின் மேலும் கூறுகையில், "இது குறித்து ஆழமான விவாதம் நடத்தப்படும். அதேநேரம் சீக்கிரம் இதில் முடிவு எடுத்துவிடுவோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

நடுநிலை நிலைப்பாடு
150 ஆண்டுக்கால ரஷ்ய ஆட்சிக்குப் பிறகு 1917ஆம் ஆண்டு பின்லாந்து சுதந்திரம் அடைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சமயத்திலும் சோவியத் படையெடுப்பை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது. அதேபோல அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர் சமயத்திலும் பின்லாந்து நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்தது. அதற்குப் பதிலாகப் பின்லாந்து மீது படையெடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தைச் சோவியத் ஒன்றியம் வழங்கி இருந்தது.

தலைகீழ்
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பின்லாந்து நாட்டில் உள்ள 200 எம்பிகளில் வெறும் 6 பேர் மட்டுமே நேட்டோவில் இணையும் முடிவை வெளிப்படையாக எதிர்கின்றனர். பெரும்பாலான எம்பிகள் நேட்டோவில் இணைய வேண்டும் என்றே தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் பின்லாந்து இறங்கி உள்ளது. வரும் 2026க்குள் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை 40% அதிகரிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எச்சரிக்கை
பொதுமக்கள், பின்லாந்து எம்பிகள் எனப் பெரும்பாலானோர் நேட்டோவில் இணையவே ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். எனவே, நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யா அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று பின்லாந்தின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ எச்சரித்துள்ளார். அதேபோல ரஷ்யாவும் பின்லாந்து நேட்டோவில் இணைந்தால் அதற்கேற்ப நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம் என்று அறிவித்துள்ளது.
-
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications