For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்சிகோ நிலநடுக்க மீட்புப் பணியில் ராக் ஸ்டாரான 'ஃப்ரைடா' மோப்ப நாய்! தெறிக்கிறது லைக்ஸ்

மெக்சிகோவை உருக்குலைய வைத்த நிலநடுக்க மீட்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் ஃப்ரைடா சமூக வலைதளத்தில் ராக்ஸ்டாராகியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவை புரட்டி போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்க மீட்புப் பணியில் ஃப்ரைடா என்ற மோப்ப நாய் செய்துள்ள சிறப்பான பணிக்காக சமூக வலைதளங்களில் ராக் ஸ்டாராகியுள்ளது.

மெக்சிகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டியின் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் குலுங்கி மண்ணுடன் மண்ணாக சரிந்தன. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நகரமே உருக்குலைந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மெக்சிகோவின் கடற்படையை சேர்ந்த மீட்புப் பணிக்கு பயன்படுத்தும் நாய்களும் பயன்படத்தப்படுகின்றன. இதில் ஃப்ரைடா என்ற மோப்ப நாய் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் துரிதமாக செயல்படுவதால் மக்களின் சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது.

 சிறந்த பணி

சிறந்த பணி

கால்களில் பூட்ஸ் அணிந்ததன் மூலம் பிரபலமான 7 வயது மஞ்சள் லேப்ரடார் மோப்ப நாயான ஃப்ரைடா சிலர் உடலில் குத்திக் கொள்ளும் டாட்டூ அளவிற்கு பிரபலமடைந்துள்ளது. தன்னுடைய வாழ்நாளில் ஃப்ரைடா 12 பேரை உயிருடன் மீட்டுள்ளது மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் உடல்களையும் கண்டுபிடிக்க உதவியுள்ளதாக மெக்சிகோ கடற்படையினர் கூறியுள்ளனர்.

மீட்புப் பணியில்

ஃப்ரைடா இன்னும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருவதாக மெக்சிகோ கடற்படை கேப்டன் கூறியுள்ளார். தெற்கு மெக்சிகோ பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் 11 குழந்தைகளை மீட்கவும் ஃப்ரைடா உதவியுள்ளது.

 முன்மாதிரியான ஃப்ரைடா

முன்மாதிரியான ஃப்ரைடா

மெக்சிகோ நிலநடுக்கத்தில் அதிகரித்து வரும் உயிர்பலியாலும் சேதத்தாலும் மக்கள் சோகத்தில் இருந்தாலும் ஃப்ரைடாவின் மீட்புப் பணி செயல் அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ராக் ஸ்டாராக உலா வருகிறாள் ஃப்ரைடா.

 தெறிக்கவிடும் லைக்ஸ்

தெறிக்கவிடும் லைக்ஸ்

ஃப்ரைடாவின் புகைப்படத்திற்கு ஏராளமான வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் ஃப்ரைடாவின் போட்டோ 92 ஆயிரம் லைக்ஸ்களை பெற்று டுவிட்டரை தெறிக்க விட்டுள்ளது.

English summary
For a country still in mourning and counting its dead from Tuesday’s devastating earthquake, Frida the Navy rescue dog has emerged as a source of inspiration and rocking in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X