துடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்... ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  துடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்...ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்- வீடியோ

  பெர்லின்: வாழ்க்கை போர் அடித்த காரணத்தால் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு அவர்களின் மரணத்தை ரசித்து விளையாடியதாக கொடூர மனம் படைத்த ஆண் நர்ஸ் ஒருவர் பேட்டியளித்துள்ளதார்.

  ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நீல்ஸ் ஹோகெல் என்ற நபர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இவர் ஒரு நோயாளிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்வதைக் கண்ட பெண் நர்ஸ் நீல்ஸ் ஹோகெல் மேல் புகார் செய்தார்.

  டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார். ஆனால், அவர்களில் 100.க்கும் மேற்பட்டோர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டனர்.

  சந்தேகத்தில் சிக்கிய நீல்ஸ்

  சந்தேகத்தில் சிக்கிய நீல்ஸ்

  உடல் நிலை சீராக இருந்த நோயாளி ஒருவருக்கு திடீரென இதய பாதிப்பு ஏற்பட்டத்தை கண்ட நீல்ஸுன் உடன் பணிபுரிந்தவர்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் நீல்ஸின் பணி நேரங்களில்தான் பெரும்பாலான நோயாளிகளின் மரணங்கள் நடந்தது அவர்களது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீல்ஸின் தொடர் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  கொன்று விளையாடினேன்

  கொன்று விளையாடினேன்

  நீல்ஸ் ஹோகெல்சிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போர் அடிக்கிறது என்பதற்காக 100க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொன்றதாக கூறியுள்ளார். தன்னுடன் உடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்த நீல்ஸ் ஹோகெல் இதனை செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

  100 பேர் வரை மரணம்

  100 பேர் வரை மரணம்

  தனது பராமரிப்பிலிருந்த நோயாளிகளுக்கு செயற்கையான இதய செயலிழப்பு ஏற்படுத்தி காப்பற்ற முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அவர்களில் பலர் இறந்திருக்கிறார்கள். மேலும் நோயாளிகளைக் கொல்வதற்கு நீல்ஸ் விஷ ஊசிகளைப் பயன்படுத்தி உள்ளார். இவ்வாறு 100 பேர்வரை அவர் கொன்று இருக்கிறார்.

  தொடர் கொலைகள்

  தொடர் கொலைகள்

  நீல்ஸ் ஹோகல் 1999 - 2005 ஆகிய ஆண்டுகளில் இரு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்கிறார். அதில் ஒல்டன்பெர்க் நகரின் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது 38 பேரையும், டெல்மன்ஹோஸ்ட் நகரில் பணிபுரியும்போது 62 பேரையும் கொலை செய்திருக்கிறார்.

  சைகோ கில்லர்

  சைகோ கில்லர்

  ஒவ்வொரு முறையும் ஒருவரை கொலை செய்த பிறகு மீண்டும் இதனை செய்யக் கூடாது என்று நினைப்பேன். ஆனால் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினானாம் அந்த சைகோ கொலையாளி.

  மரணத்தை ரசித்த பாதகன்

  மரணத்தை ரசித்த பாதகன்

  30க்கும் மேற்பட்டோர் எப்படியெல்லாம் துடிதுடித்து உயிரிழந்தனர் என்பதையும் ரசனையோடு விவரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மனி மருத்துவ வரலாற்றில் இப்படி ஒரு வழக்கை பார்த்ததில்லை எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஆயுள் தண்டனை கைதியாக இப்போது சிறையில் காலம் தள்ளுகிறான் நீல்ஸ். இப்போது போர் அடித்தால் என்ன செய்வார்?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The chief police investigator in the case, Arne Schmidt, said in August, adding that Hoegel killed "without a discernible pattern" and preyed especially on those in critical condition.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற