"காதலிக்க மனைவி தேவை.." ரூ 81 கோடி லாட்டரியை வென்றும் சந்தோஷமில்லை.. புலம்பி தள்ளும் 80s கிட்
பெர்லின்: ஜெர்மனியில் 80s கிட் ஒருவருக்கு அதிர்ஷ்ட காற்று இல்லை இல்லை சூறாவளியே அவருக்குச் சாதகமாக வீசியும் கூட துக்கத்தில் இருக்கிற கதை தெரியுமா உங்களுக்கு!
உலகத்தில் யாருக்கு எப்போது லக் அடிக்கும் என்றே தெரியாது. இப்படிக் கஷ்டப்படும் சூழலில் இருக்கும் நபர்களும் அதிர்ஷ்டத்தால் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆன கதை எல்லாம் இங்கு உள்ளது.
இந்த நபர் உண்மையிலேயே ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆனார். இருந்த போதிலும், அதை நினைத்து மகிழ்ச்சியடைய முடியாத சூழலில் புலம்பித் தள்ளி வருகிறார்.

ஜெர்மனி
ஜெர்மனியின் டார்ட்மண்டைச் சேர்ந்தவர் குர்சாட் யில்டிரிம்.. 41 வயதான 80s கிட்டான இவர், அங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கஷ்டப்பட்டு மாத சம்பளம் வாங்கும் இவரை இதுவரை எந்தவொரு பெண்ணும் காதலிக்கவில்லையாம். இதனால் 40 வயதைக் கடந்தும் சிங்கிளாகவே வாழ்ந்து வந்துள்ளார். சிங்கிளாக இருப்பவர்கள் எப்படி வெளியே கெத்தாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளே புலம்புவார்களோ அதே போலத் தான் இவரும் இருந்துள்ளார்.

அதிர்ஷ்ட சூறாவளி
இந்தச் சூழலில் தான் அதிர்ஷ்ட காற்று இல்லை அதிர்ஷ்ட சூறாவளியே இவர் மீது வீசியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இவர் வாங்கிய லாட்டரியில் 9,927,511,60 யூரோக்கள் ( இந்திய மதிப்பில் ரூ. 81 கோடி) பரிசாகக் கிடைத்துள்ளது. ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான இவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. உடனடியாக இரும்பு தொழிற்சாலை வேலையை விட்ட அவர், சுமார் 5 கோடிக்கு ஃபெராரி மற்றும் போர்ஷே சொகுசு கார்களை வாங்கினார்.

சொகுசு வாழ்க்கை
அத்துடன் நிற்காமல் விலையுயர்ந்த கடிகாரத்தையும் அவருக்குப் பிடித்த மது வகைகளையும் வாங்கி குவித்துள்ளார். இப்படி தனக்குப் பிடித்த அனைத்தையும் வாங்கினாலும் கூட தனது வாழ்க்கையில் ரியல் சந்தோஷமில்லை எனப் புலம்பித் தள்ளுகிறார் இந்த 80s கிட். பணம் இந்தளவுக்குக் குவிந்து கிடந்தாலும் தன்னுடன் குடும்பம் நடத்த ஒரு பெண் இல்லையே என இவர் ரொம்பவே பீல் பண்ணுகிறார்.

காதலிக்கப் பெண் இல்லையே
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நான் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் இன்னும் தனிமையில் வாடுகிறேன். எனக்குக் காதலிக்கப் பெண் ஒருவர் தேவை. அவர் எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. என்னைக் காதலிக்க... நான் காதலிக்கப் பெண் ஒருவர் தேவை.. என்னுடன் பயணிக்க விரும்பும்.. என்னுடன் குடும்பம் நடத்த விரும்பும் பெண் ஒருவரையே நான் தேடுகிறேன்.

பொறாமை
தொடர்ந்து அவர் பேசுகையில், "என்னிடம் இப்போது பல கோடி உள்ளது. இதுவரை என்னைக் கண்டுகொள்ளாத நபர்கள் கூட எனக்குக் கால் செய்து பணம் கேட்கிறார்கள். என் மீது பொறாமைப் படுகிறார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தான் நான் சொகுசு கார்களை வாங்கினேன். கடவுளின் கருணையால் எனக்கு இந்த பணம் கிடைத்துள்ளது. நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அங்குப் பணம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் உதவுவேன்" என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications