For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணாடிப் பாலத்தில் அது யாரு.. ஒசரமா.. ஒய்யாரமா??

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் மிகப் பிரபலமான கண்ணாடிப் பாலத்தில் திடீரென பெரிய சைஸ் கிறிஸ்துமஸ் தாத்தா காட்சி தந்து சுற்றுலாப் பயணிகளுக்குக் குஷி ஏற்படுத்தினார்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ளது இந்த கண்ணாடிப் பாலம். இரு கனவாய்களுக்கு மத்தியில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. ஷின்ஹுசாய் தேசிய ஜியாலஜிக்கல் பூங்காவில் இந்தப் பாலம் உள்ளது.

இந்தப் பாலத்தின் அடிப்பகுதியானது கண்ணாடியால் ஆனது. திறந்தது முதல் இந்தப் பாலத்திற்கு ஏகப்பட்ட பேர் வந்து பாலத்தில் நடந்து திரில்லான அனுபவத்தை பெற்று வருகின்றனர்.

300 மீ நீளம்...

300 மீ நீளம்...

இந்தப் பாலமானது 300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 300 மீட்டர் நீள தூரம் கொண்டது இது.

அதள பாதாளம்...

அதள பாதாளம்...

இந்தப் பாலத்தில் தைரியமாக நடக்க பலருக்கும் அச்சம் ஏற்படும். காரணம், கீழே குனிந்து பார்த்தால் அவ்வளவுதான் குலை நடுங்கிப் போய் விடும் என்பதால்.

திறப்பு விழா...

திறப்பு விழா...

சீனாவின் முதல் கண்ணாடிப் பாலம் இதுதான். முதலில் இதை மரத்தால் தான் செய்தனர். பின்னர் தான் இதை கண்ணாடியால் மாற்றி விட்டனர். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டது.

இயற்கை அழகு...

இயற்கை அழகு...

இயற்கை எழில் கொஞ்சும் கனவாய்ப் பகுதியில் இந்தப் பாலம் உள்ளது. இரு பெரிய மலைகளுக்கு நடுவே இந்தப் பாலம் அமைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் தாத்தா...

கிறிஸ்துமஸ் தாத்தா...

இந்த நிலையில் கிறிஸ்துமஸையொட்டி இந்தப் பாலத்தில் 10 மீட்டர் உயரம் கொண்ட பெரிய சைஸ் சான்டா கிளாஸ் பாலத்திற்கு விசிட் அடித்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தினார். இந்த தத்தாவுடன் பலரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஹேப்பி கிறிஸ்துமஸ்...

ஹேப்பி கிறிஸ்துமஸ்...

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், சீனாவிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

Image Credit: CNS

English summary
A 10-meter-tall Santa Clause appears on the glass skywalk at Shiniuzhai National Geological Park on Dec. 23, 2015. The lovable figure has attracted many tourists to take photo with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X