கைவிட்ட காதலனை கொன்று சமைத்து சாப்பிட்டாரா காதலி.. திட்டவட்டமாக மறுக்கும் அபுதாபி போலீஸ்!
காதலனை பெண் சமைத்து சாப்பிட்டது குறித்து போலீஸ் விளக்கமளித்துள்ளது.
Recommended Video

அல் அன்: அபுதாபியில் கைவிட்ட காதலனை கொன்று வெட்டி சமைத்து பிரியாணி செய்து சாப்பிட்டார் காதலி என்ற செய்தியை அபுதாபி போலீஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அபுதாபி போலீஸார் கூறியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் அன் என்ற நகரம் உள்ளது. இங்கு மொராக்கோ நாட்டை சேர்ந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்து வந்தார்.
30 வயதான இந்த பெண்ணுக்கு 25 வயதான ஒரு இளைஞருடன் லவ் ஆனது. அதனால ரெண்டு பேரும் ஒரே வீட்ல கல்யாணம் பண்ணிக்காமலேயே குடித்தனம் அதாவது லிவிங் டூ கெதர் என்று 7 வருஷம் ஓட்டினார்கள்.

காதல் கசந்தது
வருடம் ஆக ஆக காதல் கசந்தது.. பெண்ணை கழட்டி விட இளைஞர் முடிவு செய்தார். அதனால அந்த பெண்ணிடம் இளைஞர், "நான் என் சொந்த நாட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா, அப்பா வேற ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணி வச்சிருக்காங்க. அவளைதான் கல்யாணம் செஞ்சுக்க போறேன்" என்றார்.

ஆத்திரமடைந்தார்
இதை கேட்டு பெண் ஆத்திரமடைந்தார். இருக்கும்வரை எல்லாத்தையும் அனுபவிச்சு, இப்போ விட்டுட்டு போவதை தாங்கவே முடியல. அதோட இந்த 7 வருஷமா வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி போட்டுட்டு இருந்தது இளைஞன்தான். எல்லாத்தையும் அந்த பெண் இளைஞன் தலையிலதான் கட்டியிருக்கு.

இளைஞர் படுகொலை
இப்போ விட்டுட்டு போய்ட்டா வரப்போற செலவு யார் பாக்கறது?ன்னு அந்த கோபமும் பெண்ணுக்கு இருந்தது. அது எப்படி தன்னை விட்டுட்டு இளைஞர் இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கலாம், விடவே கூடாது என்று பெண் முடிவு செய்தார். இதையடுத்து அந்த இளைஞர் படு கொலை செய்யப்பட்டார்.

பிரியாணியா?
கொல்லப்பட்ட காதலனை, அந்தப் பெண் துண்டு துண்டாக வெட்டி, சமைத்து பிரியாணியாக்கி அக்கம் பக்கத்தினருக்கு பரிமாறியதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு கூடியது. ஆனால் இதுகுறித்து தற்போது அபுதாபி போலீஸார் விளக்கம் வெளியிட்டுள்ளனர்.

கட்டுக்கதை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மற்றபடி சமைத்து சாப்பிட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை. அதுபோல செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தேவையில்லாக கற்பனைகளை விரிய விட வேண்டாம். அதிகாரப்பூர்வமாக வரும் தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று அபுதாபி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications