கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்கள்.. மொத்தமாக நீக்க போகிறோம்.. யூடியூப் அறிவிப்பு
சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளங்களில் கொரோனா நோய் குறித்த தவறான தகவலைத் தடுக்கும் முயற்சியாக , கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானவை என்று தவறாகக் கூறும் வீடியோக்களை அகற்றப்போவதாக யூடியூப் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுபபூசி போடாதது. தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவுது முக்கிய காரணம் ஆகும். கூகுளில் ஏராளமான பொய்யான தகவல்கள் கொரோனா தடுப்பூசிகள் குறித்து கொட்டிக்கிடக்கின்றன.குறிப்பாக யூடியூபில் தடுப்பூசி குறித்து பயமுறுத்தும் வண்ணம் பல்வேறு மொழிகளில் வீடியோக்கள் உள்ளன.
இதுவும் கொரோனா பரவலை அதிகரிக்க காரணமாக உள்ளதாக புகார்கள் உள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் கொரோனா நோய் குறித்த தவறான தகவலைத் தடுக்கும் முயற்சியாக , கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானவை என்று தவறாகக் கூறும் வீடியோக்களை அகற்றப்போவதாக யூடியூப் அறிவித்துள்ளது.

தவறான தகவல்
ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று காட்டப்படும் தவறான தகவ;லகள் உட்பட, கொரோனா வைரஸ் சிகிச்சையில் தவறான கட்டுக்கதைகளை பரப்பும் பதிவுகளை வெளியிட வீடியோ பகிர்வு நிறுவனமான யூடியூப் ஏற்கனவே தடை செய்துள்ளது.
ஆனால் யூடியூப் தளம் மருத்துவ கோட்பாடுகள் குறித்து தவறான தகவல்கள் பரவுவதை கண்டு கவலை அடைந்துள்ளது. இது தொடர்பாக யூடியூப் வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றிய தவறான கூற்றுகள் பொதுவாக தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களுக்கு பரவுவதை நாங்கள் தொடர்ந்து பார்த்தோம். நாங்கள் இப்போது கோவிட் -19 உடன் ஆரம்பித்த வேலையை மற்ற தடுப்பூசிகளுக்கு விரிவுபடுத்துவதற்காக ட முன்னெப்போதையும் விட முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம்."

வீடியோ நீக்கம்
உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மற்றும் WHO (உலக சுகாதார அமைப்பு) மூலம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளவை என உறுதிப்படுத்தப்படும் தடுப்பூசிகள் மீது எங்கள் கொள்ளை விரிவாக்கம் செய்யப்படும். அதேநேரம் அம்மை மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற நோய்களுக்கான வழக்கமான தடுப்பூசிகள் பற்றிய தவறான கூற்றுகள் யூடியூபிலிருந்து அகற்றப்படும். மேலும் கொரோனாவிற்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வேலை செய்யவில்லை என்றோ அல்லது மோசமான விளைவு ஏற்படுத்தியாக கூறும் வீடியோக்களை நீக்க உள்ளோம்.

பொய்யான தகவல்
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மன இறுக்கம், புற்றுநோய் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றன அல்லது தடுப்பூசிகளில் உள்ள பொருட்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பப்படும் வீடியோக்களை அகற்றுவோம். எந்தவொரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பைப் போலவே, எங்கள் அமைப்புகளும் இந்த அமலாக்கத்தை முழுமையாக அதிகரிக்க நேரம் எடுக்கும்" என்று யூடியூப் கூறியுள்ளது.

தடுப்பூசி எதிராக கூடாது
புதிய வழிகாட்டுதல்களுக்கு விதிவிலக்குகள் இருப்பதை யூடியூப் வலியுறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களை பகிரலாம். ஆனால் அந்த யூடியூப் வீடியோ தடுப்பூசி போடுவதற்கு எதிராகவோ அல்லது தடுப்பூசி போடுவதற்கு தயக்கத்தை ஏற்படுத்துவதாகவோ இருக்க கூடாது.

யூடியூப் தகவல்
கோவிட் -19 தடுப்பூசி கொள்கைகளை மீறியதற்காக கடந்த ஆண்டிலிருந்து 130,000 க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. தனது கோவிட் தவறான தகவல் வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜெர்மன் மொழி சேனல்களைத் தடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications