For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு... உயர்மட்ட கூட்டத்துக்கு நவாஷ் ஷெரீப் அழைப்பு

Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீப் உயர்மட்ட குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளரான 47 வயது ஹமீத் மிர் நேற்று கராச்சி விமான நிலையம் அருகே காரில் சென்ற போது மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

இவருக்கு ஏற்கனவே தலீபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அலுவலகம் சென்று கொண்டிருந்த ஹமீத் மீது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த ஹமித் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் கராச்சி நகரில் பதற்றம் நிலவுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது தொடர்பாக பரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக இன்று உயர் மட்ட குழு கூட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

குற்றவாளிவாளிகளை அடையாளம் காண உதவுபவர்களுக்கு ரூ 50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.

English summary
Senior Pakistani TV journalist Hamid Mir, who was on Saturday shot at in Karachi is out of danger. He had undergone a surgery on Saturday. Mir was rushed to the hospital after he was hit by three bullets by four unidentified motorcycle-borne gunmen en route to his studio from the Karachi airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X