பேய் ஆடை.. ஸ்டைலான சோபியா.. ஸ்டன்னிங் சூப்பர்மேன்.. ஹேப்பி ஹல்லோவென் டே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சார்லேட், அமெரிக்கா: அக்டோபர் 31.. ஹல்லோவென் டே என்று அமெரிக்கா மட்டுமல்லாமல் பல மேலை நாடுகளில் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

ஓகே எதுக்கு ஹல்லோவென் தினம் கொண்டாடுறாங்கனு "நெட்"ல தேடி பார்த்தபோது தெரிஞ்ச கதை இது தான். உங்களுக்கும் சொல்றேன். இது நம்ம ஊர்ல கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிற ஆன்மாக்கள் தினத்தோடு (கல்லறைத் திருவிழா) தொடர்பு கொண்டது தான்

நம்ம ஊர்ல ஹல்லோவென் டே என கொண்டாடாவிட்டாலும் நம் ஊரிலும் கூட கிறிஸ்தவர்கள் நவம்பர் 1 ஆம் தேதியை புனிதர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். நவம்பர் 2 ஆன்மாக்கள் தினமா கொண்டாடறாங்க. ஆன்மாக்கள் தினம் அன்று நமக்கு பிரியமாய் இருந்து நம்மை பிரிந்து போன அன்புக்குரியவர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த நவம்பர் 1க்கு முந்தய இரவை தான் "ஹல்லோவென் டே" என அக்டோபர் 31ல் கொண்டாடுறாங்க .

பயம் காட்டு முகமூடிகள்

பயம் காட்டு முகமூடிகள்

இந்த நாளை அமெரிக்கா மட்டுமல்லாமல் பல மேலை நாடுகளில் வெகு சிறப்பா கொண்டாடுகிறார்கள்.அக்டோபர் மாதத்தையே ஹல்லோவென் மாதம் என்று கொண்டாடுகிறார்கள். சரி என்ன தான் பண்றங்க?. ஹல்லோவென் என்றாலே அச்சுறுத்தும் எலும்பு கூடுகள், பேய் போன்ற ஆடைகள், பயம் காட்டும் முகமூடிகள், இரத்தம் பாயும் கத்தி, வித விதமான ஆடைகள் என்று கடையில் வியாபாரம் களை கட்ட தொடங்கி விடுகிறது. பள்ளிகள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் என்று பல இடங்களில் இதை ஒட்டி சிறப்பு கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இங்கு குழந்தைகள் தங்களுக்கு பிடித்த மாதிரி அழகு அழகான ஆடைகளில் வருகிறார்கள்.

வண்டாக மாறும் குட்டீஸ்கள்

ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் உடைகள் என்று ஆன் பிள்ளைகள் ஸ்டைலாக கலக்கினால் பெண் குழந்தைகள் சோபியா, டோரா என்று கார்ட்டூன் தேவதைகளாக மாறி அசத்துகிறார்கள். முயல், மான் , புலி என்று விலங்குகளாகவும் சிலர் வண்ணத்து பூச்சி, வண்டாக கூட மாறி விடுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள சார்லேட் நகரில் உள்ள கான்கார்ட் மால் என்ற வணிக வளாகத்தில் நடந்த கொண்டாட்டங்கள் இங்கே (வீடியோவில)

அச்சுறுத்தும் கெட்டப்பும் உண்டு

அச்சுறுத்தும் கெட்டப்பும் உண்டு

நம்ம ஊரில் நடக்கும் மாறுவேட போட்டியன்று எல்லோரும் ஒவ்வொரு விதமாக வருவது போல ஊரே திரண்டு வந்து கொண்டாடுகிறார்கள். குழந்தைகளுக்கு மட்டும் தான கொண்டாட்டம் என சில பெற்றோர்களும் கூட சூப்பர்மேன் சூப்பர்வுமன் ஆக வந்திருந்தது பார்க்கவே அசத்தலாக இருந்தது. அச்சுறுத்தும் கெட்டப்பிலும் சிலர் வருவார்கள்.

கேளிக்கை நேரம்

கேளிக்கை நேரம்

ஸ்பைடர் மேன் ஆக உடையணிந்திருந்த ஒருவரோடு குழந்தைகள் உற்சாகமாக குத்தாட்டம் போட்டனர். குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் ஸ்பைடர்மேன் பார்த்தாலே உற்சாகம் பக்கத்தில் நின்று ஆடினால் எப்படி இருக்கும் அவர்களுக்கு ஒரே துள்ளல் தான். குழந்தைகளுக்கு வண்ணம் தீட்ட இடம் , ஸ்டிக்கர்ஸ் சேர்ப்பது என்று கேளிக்கை நேரமும் வைத்து, நடன நேரமும் வைத்து குஷியாக்கியதோடு நிற்காமல் கடைசியில் கேண்டி டைமும் உண்டு.

கடை கடையாக ஏறி இறங்கி சாக்லேட்

கடை கடையாக ஏறி இறங்கி சாக்லேட்


ஹல்லோவென் என்றாலே வண்ண ஆடைகள் மட்டுமல்ல வாய் இனிக்க இனிக்க மிட்டாய்களும் தான் குழந்தைகளுக்கு. எல்லோருக்கும் எல்லா கடைகளிலும் சாக்லேட் ஃபிரீ. எனவே குட்டிஸ் எல்லாம் குஷியோ குஷி ஒவ்வொரு கடையாக போய் ஒரு சாக்லேட் ஆக வாங்கி தங்கள் கவரை நிறைத்து கண்கள் சிரிக்க குழந்தைகள நடந்து செல்வதை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். அவ்வளவு கொள்ளை அழகு .

ஹாப்பி ஹல்லோவென்!

- Inkpena சஹாயா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today is October 31, its Happy Halloween day in US other western countries.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற