இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நோ சுனாமி வார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜகார்தா : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

அமெரிக்காவின் ஜியாலஜிக்கல் சர்வே வெளியிட்டுள்ள தகவலில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் பெங்குளூவில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது,

Heavy earthquake hits at Indonesia

இது ரிக்டர் அளவு கோளில் 6.4ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A strong 6.4-magnitude earthquake hit off the Indonesian island Sumatra on Sunday but there was no tsunami risk, seismologists said as panicked residents fled their homes.
Please Wait while comments are loading...