For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்த்துப்பா. புடின் கிட்ட மாட்டிக்கிராதீங்க.. புத்துரூக்கு அனுப்பி வச்சுடப் போறாரு!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: தங்க ஒரு வீடு இல்லாமல் வீதியில் திரிந்து வரும் மாஸ்கோவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது துயர நிலையை வீடியோவாக எடுத்து பிளாக்கில் போட்டுள்ளார். இப்போது இந்த வீடியோ, யூடியூபில் பிரபலமாகி வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில் தான் தினசரி சந்திக்கும் சோதனைகளையும், போராட்டங்களையும் உருக்கமாக விவரித்துள்ளார் ஜென்யா யாகுத் என்ற அந்த நபர்.

ரஷ்யாவில் இவர்தான் இப்போது ஹாட்டஸ்ட் டாப்பிக் ஆக மாறியுள்ளார். ரஷ்யா முழுவதும் ஓவர்நைட்டில் பிரபலமாகி விட்டார் ஜென்யா.

வீடியோவில் துயரம்

வீடியோவில் துயரம்

கடந்த மே மாத இறுதியில் தனது நிலையை விவரித்து ஒரு வீடியோவை உருவாக்கினார் ஜென்யா. அதை பிளாக்கில் போட்டு விட்டார். அது பின்னர் யூடியூப் மூலம் பரவி வைரல் ஆகி விட்டது.

10 லட்சம் பார்த்துள்ளனர்

10 லட்சம் பார்த்துள்ளனர்

யூடியூபில் இந்த வீடியோவை இதுவை 10.1 லட்சம் பேர் பார்த்துள்ள்ளனர். 38,000 சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்துள்ளனர். படு வேகமாக பிரபலமாகி விட்டது இந்த வீடியோ.

மாஸ்கோவின் மறுபக்கம்

மாஸ்கோவின் மறுபக்கம்

மாஸ்கோவின் மறுபக்க வாழ்க்கையை உலகுக்கு எடுத்துக் காட்ட நான் விரும்பினேன். எனது வாழ்க்கையே அதற்கு நல்ல உதாரணம் என்பதால் அதையே வீடியோவில் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார் ஜென்யா.

இதுதான் என் வாழ்க்கை

இதுதான் என் வாழ்க்கை

இலவசமாக குடிநீர் எங்கு கிடைக்குமோ அங்கு போய் இவர் தினசரி பெற்றுக் கொள்கிறார். பொதுக் கழிப்பிடம், குளிப்பிடத்தைப் பயன்படுத்துகிறார். மற்றவர்கள் குப்பை என்று ஒதுக்குவதை இவர் விரும்பிப் பெற்று அதில் பலன் அடைகிறார்.

அடையாளம் தெரிஞ்சு போச்சு

அடையாளம் தெரிஞ்சு போச்சு

வீடியோ வெளியீட்டுக்குப் பின்னர் இப்போது என்னை பலரும் அடையாளம் கண்டு கொள்கின்றனர். நலம் விசாரிக்கின்றனர். ஆனால் நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன். வாழ்க்கை மாறவில்லை. என்கிறார் ஜென்யா.

செல்பி எடுக்கிறார்கள்

செல்பி எடுக்கிறார்கள்

மேலும் அவர் தொடருகையில், பலர் என்னுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர். மற்றபடி என்னுடைய வீடு இன்னும் தெருதான். அதில் மாற்றமே இல்லை என்றார் சிரித்தபடி.

உதவி செய்யும் ஆண்ட்ரே

உதவி செய்யும் ஆண்ட்ரே

யாகுத் சில மாதங்களுக்கு முன்பு ஆண்ட்ரே என்பவரை சந்தித்தார். அவர் ஒரு போட்டோகிராபர். அவரிடம் உதவிக்குப் பணம் கேட்டார். ஆனால் பணம் தர மறுத்த ஆண்ட்ரே சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். பின்னர் யாகுத்தின் கதையைக் கேட்ட அவரே, யாகுத்தின் நிலையை வீடியோ படமாக்கி பிளாக்கி் போட்டுள்ளார்.

மாஸ்கோ நகரம் அல்ல.. அல்ல.. நரகம்

மாஸ்கோ நகரம் அல்ல.. அல்ல.. நரகம்

ஆண்ட்ரே கூறுகையில் மாஸ்கோ நகரம் அல்ல, நரகம். காரணம் இங்கு சாமானியர்களால் வாழவே முடியாது. அவர்களுக்கு இங்கு இடமே இல்லை. இதை அனைவரும் அறிய வேண்டும், சாமானியர்களுக்கும் இங்கு வாழும் உரிமை வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோ படம் என்றார்.

பார்த்துப்பா. புடின் கிட்ட மாட்டிக்கிராதீங்க.. புத்துரூக்கு அனுப்பி வச்சுடப் போறாரு!

English summary
This homeless man has found YouTube fame after a cameraman put his street life on Blog.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X