For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா படுத்தும் பாடு! எலிகளை வளைத்து வளைத்துக் கொல்லும் ஹாங்காங் அரசு.. என்ன காரணம் தெரியுமா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், ஹாங்காங் அரசு எடுத்துள்ள முடிவு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் எந்தவொரு நாடும் கொரோனா பரவலில் இருந்து முழுமையாக மீளவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும், கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் அதை முழுவதுமாக ஒழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்குக் கூட இது பிரச்சினை தான,

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள்.. தடுப்பது எப்படி? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள்.. தடுப்பது எப்படி? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 ஜீரோ கோவிட் திட்டம்

ஜீரோ கோவிட் திட்டம்

கொரோனா பரலைத் தடுக்க ஒவ்வொரு நாடும் ஒரு விதமான திட்டங்களைப் பின்பற்றி வருகிறது. பெரும்பாலான ஐரோப்பா நாடுகள் கொரோனா உடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தீவிர கொரோனா பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை மட்டும் அந்த நாடுகள் எடுத்து வருகின்றன. அதேநேரம் சீனா உள்ளிட்ட சில நாடுகள் ஜீரோ கோவிட் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது ஒரு நபருக்கும் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடாது என்பதே இவர்களின் திட்டம்.

 சிக்கிய ஹேம்ஸ்டர்கள்

சிக்கிய ஹேம்ஸ்டர்கள்

ஆனால், இந்த கோவிட் தடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது. மிக எளிதாகவும் வேகமாகவும் பரவும் கொரோனாவுக்கு எதிராக ஜீரோ கொரோனா திட்டம் என்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் அந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இப்போது அப்படி தான் மனிதர்களைத் தாண்டி விலங்குகளும் இந்த கொடிய கொரோனாவுக்கு கொத்து கொத்தாகப் பலியாகத் தொடங்கியுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த ஜன. 18ஆம் தேதி ஹாங்காங்கில் உள்ள செல்லப் பிராணிகளுக்கான கடை ஒன்றில் 11 ஹேம்ஸ்டர்கள் (வெள்ளெலி) கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த ஹேம்ஸ்டர்கள் டிசம்பர் மாத இறுதியில் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை ஹேம்ஸ்டர்கள் இறக்குமதிக்கு ஹாங்காங் அரசு முற்றிலுமாக தடை விதித்தது.

 அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

மேலும், டிச.22க்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட ஹேம்ஸ்டர்களை வைத்திருக்கும் செல்லப் பிராணிகள் கடைகளுக்கும் ஹேம்ஸ்டர் உரிமையாளர்களுக்கும் உடனடியாக அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும் கடந்த டிச. 22க்கு பிறகு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து ஹேம்ஸ்டர்களையும் கொல்ல அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு


இது குறித்து ஹாங்காங்கின் சிட்டி யுனிவர்சிட்டியில் உள்ள விலங்கு நல மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹேம்ஸ்டர்களின் சுவாச பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கும். இருப்பினும், அவை மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு. எனவே ஹேம்ஸ்டர் உரிமையாளர்கள் பீதி அடைய வேண்டாம், ஹேம்ஸ்டர்களை கைவிடவும் வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், டிச. 22க்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து ஹேம்ஸ்டர்களையும் கொல்லும் முடிவில் அந்நாட்டு அரசு உறுதியாக உள்ளது. இதற்கு அந்நாட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,

Recommended Video

    Omicron in Community Transmission Stage in India, says INSACOG | OneIndia Tamil
     ஜீரோ கோவிட் திட்டம் சாத்தியமா

    ஜீரோ கோவிட் திட்டம் சாத்தியமா

    ஜீரோ கோவிட் திட்டம் என்பது கிட்டதட்ட அடையவே முடியாத ஒரு திட்டம் தான். இதனால் தான் சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகள் கூட தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. ஆனால், சீன ஆளுகைக்கு உட்படத் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங் ஜீரோ கோவிட் திட்டத்தில் உறுதியாக உள்ளது. இதனால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஹேம்ஸ்டர்கள் கொல்லப்படும் எனக் கூறப்படுகிறது.

    English summary
    Hong Kong government announced that all hamster imported after Dec.22 will be killed. Animal to Human transmission of Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X