ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கிய டாங்கர் கப்பல்.. எச்சரிக்கும் ஈரான்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் நிர்ணயித்த வழித்தடத்தை கடந்து சென்ற எண்ணெய் டாங்கர் கப்பல், கடற்படஒஇ கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அனுமதித்த பாதுகாப்பான பாதைக்கு வெளியே பயணித்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்கு சென்றது. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையிலும் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

Hormuz Strait

ஆனால் சில நாட்களிலேயே இந்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 13 நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கும் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்து, உரிய அனுமதியுடன் மட்டுமே கப்பல் செல்ல முடியும் என்று அறிவித்தது.

இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் நிர்ணயித்த வழித்தடத்தை கடந்து சென்ற எண்ணெய் டாங்கர் கப்பல், கடற்படஒஇ கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஈரான் ஆயுதப் படைகளுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

இருப்பினும் இதுகுறித்து ஈரான் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் உக்ரைன், பிரிட்டன் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்த இடமும் தங்களுக்கு சட்டப்பூர்வ இலக்கு என்றும் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+