For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு வேர்ல்ட் கப் வேணும்.. கேன்சரால் பாதித்த சிறுவனின் ஆசை.. கடைசியில் கிடைத்த சர்ப்ரைஸ்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில், கேன்சரால் பாதிக்கப்பட்ட பென் என்ற குட்டி சிறுவன் உலகம் முழுக்க வைரலாகி உள்ளான்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில், கேன்சரால் பாதிக்கப்பட்ட பென் என்ற குட்டி சிறுவன் உலகம் முழுக்க வைரலாகி உள்ளான்.

பென் என்ற அந்த சிறுவன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்காக சிகிச்சை பெற்றுவந்த இவனுக்குதான் இந்த சர்ப்ரைஸ் கிப்ட் கிடைத்துள்ளது.

உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுவன் பெரிய சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்து வந்துள்ளான். தற்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறான்.

6 வாரம்

6 வாரம்

லண்டனை சேர்ந்த இந்த சிறுவன், கடந்த ஆறு வாரமாக ரேடியோ தெரபி என்ற சிகிச்சை பெற்று வந்துள்ளான். இதனால் உடலில் நிறைய மாற்றம் ஏற்பட்டு ஆளே மோசமாகி இருக்கிறான். இந்த நிலையில் மருத்துவமனையிலேயே கடந்த ஆறு வாரம் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவனது முடி மொத்தமாக கொட்டி, புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளான்.

உலகக் கோப்பை வேண்டும்

இந்தநிலையில் நோயில் இருந்து மீண்டவன் மருத்துவமனையிலேயே கால்பந்து உலகக் கோப்பை போட்டியை பார்த்துள்ளான். அதோடு, பெரிய நோயில் இருந்து மீண்ட அழகு சிறுவன் அசால்டாக எனக்கு உலகக் கோப்பை வேண்டும் என்று கேட்டிருக்கிறான். தனக்கு என்ன நோய் என்று கூட தெரியாமல் சந்தோசமாக கேட்டிருக்கிறான்.

சூப்பர்

ஆனால் அவன் எதிர்பார்க்காத நிலையில், அவனுக்கு உண்மையாகவே சிறிய கால்பந்து உலகக் கோப்பை மாடலை கொடுத்துள்ளனர். அவன் சந்தோசமாக கோப்பை பெறும் வீடியோ பெரிய வைரல் ஆகியுள்ளது.

வைரல் பாஸ்

இந்த நிலையில் அந்த சிறுவன் உலகம் முழுக்க வைரலாகி உள்ளான். இவனுக்காக பென்ஸ் வேர்ல்ட் கப் (#BensWorldCup) என்று டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள். இவனை குறித்து எல்லோரும் வாழ்த்து செய்திகள் தெரிவித்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

English summary
Brain Cancer affected Ben gets focus from FIFA world cup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X