ச்சோ சுவீட் ஷோ சூயூ.. அம்பெடுத்து விட்டு ஆளை மயக்கிய இந்த கொரிய தேவதை யார் தெரியுமா?

சியோல்: கொரியாவை சேர்ந்த நடிகையான ஷோ சூயூ உலகம் முழுக்க வைரலாகி உள்ளார். தன்னுடைய க்யூட் வீடியோக்களால், மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஆண்கள், இன்னும் கொரியாவிற்கு படையெடுக்காதது மட்டும்தான் மிச்சம், அந்த அளவிற்கு இந்த அழகி யார் என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். பலர் இவரை பற்றி இணையத்தில் பல ஆர்மி பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
அட யார்தான் இவங்க, இவங்க விலாசம் கிடைக்குமா என்று சுற்றுபவர்களுக்கு இவரை பற்றி ஒரு குட்டி அறிமுகம்.
|
யார் இந்த ஷோ சூயூ
கொரியாவின் செல்ல குட்டியான இவர் பிறந்தது தைவானில். தைவானில் பிறந்த இந்த பறவை பறந்து வந்து தென்கொரியாவில் குடியேறினார். இவரை எல்லோரும் வில்வித்தை வீராங்கனை என்று நினைத்துக் கொண்டு இருக்க உண்மை வேறு. அவர் எல்லா வித்தையும் தெரிந்த சாகச சிறுமி. ஆம் இவருக்கு 16 வயதுதான் ஆகிறதாம். நடனம், பாடல், நடிப்பு, பேச்சு, விளையாட்டு என்று எல்லாம் தெரிந்த திறமைசாலி.
|
எப்படி வைரலானார்
இவருடைய சில வீடியோக்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு தென்கொரிய திரைநட்சத்திரங்களுக்காக விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதில், வில்லெடுத்து விட்டார் இந்த பெண் க்யூபிட் . அப்போது கொரியாவில் நூடுல்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ஆண்கள் தொடங்கி கோயம்பேட்டில் டீ குடித்துக் கொண்டிருந்த நபர்கள் வரை மயங்கி போனார்கள்.
|
என்ன நடந்தது
அந்த வீடியோவில் இவர் அம்பெடுத்து விடவேண்டும். அவ்வளவுதான். ஆனால் அப்போது அம்பின் கடைசி பகுதி அவரது முடியில் பட்டு அது காற்றில் வேகமாக பறக்கும். இதனால் அவர் சரியாக குறி வைக்க முடியாமல் தோற்று போய் சோகமாக முகத்தை வைத்திருப்பார். இந்த முகபாவனை உலகம் முழுக்க வைரலானது.
|
வைரல்
அதன்பின் என்ன ஹாலிவுட் டைரக்டர்கள் தொடங்கி எல்லோரும் இவரை பற்றி பேச ஆரம்பித்தனர். தமிழ்நாட்டில் இவருக்கு இன்னும் ஆர்மி ஆரம்பிக்காதது மட்டும்தான் குறை. அவருடைய மற்ற சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் இன்னும் அதிக நபர்களால் பார்க்கப்பட்டால் முடங்கிப் போகும் நிலை கூட ஏற்படலாம். அந்த அளவிற்கு அம்மணி அம்மாடி வைரலாகி உள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!