இப்படி ஒருத்தரை வச்சிக்கிட்டுதான் திணறினோமா? டிரம்ப் கார்டை இறக்கிய ஹர்திக் பாண்டியா! யாருங்க இவரு?
கேப் டவுன்: இந்திய அணிக்கு பல காலமாக பிரச்சனையாக இருக்கும் ஒரு விஷயம் பவுலிங் ஆல் ரவுண்டர். எப்போதில் இருந்து இந்த பிரச்சனை நிலவுகிறது என்றால்.. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதில் இருந்து. அதற்கான தீர்வு இந்திய அணிக்கு கிடைத்துவிட்டதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய தொடங்கி உள்ளன.
யுவராஜ் சிங் ஓய்விற்கு பின் பல இளம் வீரர்களை களமிறக்கி இந்திய அணி சோதனைகள் செய்தது. பவுலிங் செய்ய கூடிய, திடீரென பேட்டிங் செய்து அணியை மாற்ற கூடிய வீரர்களை இந்திய அணி தேடிக்கொண்டு இருந்தது.
இதற்காக விஜய் சங்கர், கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை கூட இந்திய அணி களமிறக்கி பார்த்தது. ஆனால் யாரும் இந்திய அணிக்கு பெரிதாக உதவவில்லை. அதிலும் விஜய் சங்கர் எல்லாம் மோசமாக சொதப்பி வந்தார்.
இந்திய அணியில் ஜடேஜா இருந்தாலும் அவர் அடிக்கடி காயம் அடைகிறார்.

ஹர்திக் பாண்டியா
தற்போது ஹர்திக் பாண்டியாதான் உருப்படியான ஆல் ரவுண்டராக இருக்கிறார். அவர் மட்டுமே முழுமையாக பவுலிங், பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவரும் கூட கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வரை எல்லாம் இவரும் காயம் காரணமாக பவுலிங் செய்யாமல் பேட்டிங் மட்டுமே செய்து வந்தார். இந்த நிலையில்தான் இந்திய அணிக்கு இன்னொரு நல்ல ஆல் ரவுண்டர் தேவை என்ற நிலை இருந்தது. இதற்காக அணியில் கொண்டு வரப்பட்டவர்தான் தீபக் ஹூடா. ஐபிஎல் தொடரில் இவர் நன்றாக ஆடினார்.

ஐபிஎல் ஹூடா
லக்னோ அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிய இவர் சில போட்டிகளில் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். சில போட்டிகளில் நன்றாக பவுலிங்கும் செய்தார். வலது கை ஆப் ஸ்பின் பவுலிங் போடும் திறமை கொண்டவர் தீபக் ஹூடா. இவரை ஆல் ரவுண்டராகவே இந்திய அணியில் எடுத்தனர். ஆனால் யாருக்காவது காயம் ஏற்பட்டு இவர் பிளேயிங் லெவனில் களமிறங்கினால், அவருக்கு பவுலிங் மட்டும் கொடுக்க மாட்டார்கள். அதாவது 5 பவுலர்களை கடைசி வரை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. ஆசிய கோப்பை தொடரில் இது அடிக்கடி நடந்தது.

ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை தொடரில் தீபக் ஹூடா அணியில் இருந்தும் கூட இந்திய அணி 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தியது. விக்கெட்டே செல்லாமல் இருக்கும் போதிலும் கூட இவரை வைத்து டெஸ்ட் கூட ரோஹித் சர்மா செய்ய மாட்டார். எந்த பவுலருக்காவது காயம் ஏற்பட்டால், இவரை பயன்படுத்தலாம். அதற்கு மட்டும் இவரை அணியில் வைத்துக்கொள்ளலாம். மற்றபடி அணியில் வேறு யாரையும் பயன்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் தீபக் ஹூடா இருந்தார். இவரை பவுலிங் செய்ய பயன்படுத்தாமல் இருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது.

பவுலர்கள்
ஏனென்றால் இந்திய அணியில் இது போன்ற பவுலர்கள் சிறப்பாக விக்கெட் எடுத்து உள்ளனர். சச்சின் பல முறை விக்கெட் எடுத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் சேவாக் விக்கெட் எடுத்து இருக்கிறார். முன்பு கோலியும் இதேபோல் விக்கெட் எடுத்தவர்தான். ஆனால் ரோஹித் கேப்டன்சி கீழே இந்திய அணியில் இது போன்ற பவுலர்கள் பயன்படுத்தப்படுவது இல்லை. ஆல் ரவுண்டர் ஆப்ஷனுக்காக தீபக் ஹுடாவை அணியில் எடுத்துவிட்டு அவரை சரியாக பயன்படுத்தாமல் இருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் நேற்று ஹர்திக் பாண்டியா தீபக் ஹுடாவை சிறப்பாக பயன்படுத்தினார்.

தீபக் ஹூடா
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 191/6 ரன்கள் எடுத்தது. சூர்யா குமார் யாதவ் அதிரடியாக ஆடி 111 ரன்களை எடுத்தார். இதையடுத்து பேட்டிங் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து 126-10 ரன்களுக்கு தோல்வி அடைந்தது. இதில் டார்லி மிட்சல், ஆடம் மில்னே, டிம் சவுதி, இஷ் சோதி ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார். 4 விக்கெட் எடுத்த இவர் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 2.5 ஓவர்கள் மட்டுமே வீசி நியூசிலாந்து அணியை இவர் காலி செய்தார்.

பவுலர்
நியூசிலாந்து பிட்சில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலர் இவர்தான். இப்படி ஒரு பவுலரை வைத்துக்கொண்டுதான் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இவரை பயன்படுத்தாமல் இருந்தது. ரோஹித் சர்மா தவறவிட்டதை ஹர்திக் பாண்டியா பிடித்துக்கொண்டு சிறப்பாக கேப்டன்சி செய்து இருக்கிறார். தீபக் ஹுடாவை டிரம்ப் கார்ட் போல பயன்படுத்தி விக்கெட் எடுத்து இருக்கிறார். அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இனி பவுலிங் செய்ய வேண்டும் என்று நேற்று பேட்டியில் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டு இருந்தார். ஹர்திக் பாண்டியா முழு நேர கேப்டனாகும் பட்சத்தில் அதை செயல்படுத்தினால் கண்டிப்பாக இந்திய அணி புதிய பலம் பெறும்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications