"உலகம் இப்படி தான் அழியும்!" மனிதர்கள் அழிவு கொடூரமாக இருக்கும்! பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்த உலகம் எப்படி அழிய வாய்ப்பு இருக்கிறது. மனிதர்களின் ஆட்டத்திற்கு எது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்பது குறித்து முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த உலகம் இப்படி அழியும்.. அப்படி அழியும் எனப் பல கருத்துகள் இணையத்தில் உலா வருகிறது. இதை வைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் என்றும் பயங்கர ஹிட் தான். ஆனால், உலகம் எப்படி அழியும் என்பது குறித்து யாருக்கும் துல்லியமாகத் தெரியாது.

 How the Life on Earth could come to an end as the Oxygen levels are dropping

இதற்கிடையே உலகம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வியக்க வைக்கும் மாற்றம் நடைபெறும் என்பதை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்,

ஆக்சிஜனேற்ற நிகழ்வு: இது மட்டும் நடந்தால் பெரும் ஆக்சிஜனேற்ற நிகழ்வுக்கு (GOE) முன்பு பூமி எப்படி இருந்ததோ அதே நிலைக்கு நாம் திரும்புவோம். சுமார் 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் ஆக்சிஜனேற்ற நிகழ்வில் தான் நமது பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது. இதுதான் நமது பூமியின் சூழலை மொத்தமாக மாற்றியது.. மனிதர்கள் உட்பட பல உயிரினங்கள் தோன்றவும் இதுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகமே வியந்து பார்க்குதே.. மாபெரும் சாதனை படைத்த இஸ்ரோ.. வெற்றிகரமாக இலக்கை அடைந்தது ஆதித்யா எல் 1

இருப்பினும், இந்த ஆக்ஸிஜன் நிறைந்த காலம் பூமியில் எப்போதும் நிரந்தர அம்சமாக இருக்காது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பில்லியன் ஆண்டுகளில் ஆக்சிஜன் குறைப்பு நிகழ்வு (deoxygenation) ஏற்படலாம், இது மீத்தேன் ஆதிக்கம் செலுத்தும் வளிமண்டலத்திற்கு வழிவகுக்கும், இது சுமார் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் இருந்த ஆர்க்கியன் பூமியைப் போன்ற நிலையை ஏற்படுத்தும்.

ஆக்சிஜன் குறையும்: இந்த மாற்றம் மனித நாகரீகம் உட்பட ஆக்சிஜனைச் சார்ந்த வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் முற்றுப்புள்ளியை வைக்கும். சூரியனின் அதிகரித்து வரும் ஒளிர்வு மற்றும் வாயுவக்களை பிளக்கும் அதிக வெப்பம் ஆகியவை காரணமாக கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கணிசமாகக் குறைகிறது. இந்த CO2 குறையும் போது ஒளிச்சேர்க்கை குறையும். இதனால் ஆக்சிஜன் உற்பத்தியும் கூட மிகக் கடுமையாகக் குறையும்.

 How the Life on Earth could come to an end as the Oxygen levels are dropping

இதற்கு முன்பு அதிகரிக்கும் சூரியக் கதிர்வீச்சு பூமியின் கடல்களை சுமார் 2 பில்லியன் ஆண்டுகளில் ஆவியாகிவிடும் என்று கூறியது,. ஆனால் இந்த புதிய ஆய்வில் ஆக்சிஜன் குறைவு நிகழ்வு என்பது கடல் நீர் ஆவி ஆவதற்கு முன்பே நடக்கும் என்றும் அது பூமியில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் அழியும்: இது மிக மோசமான பிரச்சினை என்று ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆய்வாளர் கிறிஸ் ரெய்ன்ஹார்ட் எச்சரிக்கிறார். இந்த நிகழ்வு மட்டும் ஏற்பட்டால் பூமியில் இருக்கும் ஆக்சிஜன் அளவு தற்போதுள்ளதை காட்டிலும் பல மடங்கு குறைந்துவிடும். அதுபோன்ற நிலை ஏற்பட்டால் மனிதர்கள் போன்ற ஏரோபிக் உயிரினங்களால் பூமியில் வாழவே முடியாது. இது தற்போது பூமியில் வாழும் பெரும்பாலான உயிரினங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

இந்த ஆய்வு ஏலியன் குறித்த ஆய்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும்.ய பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் ஏலியன்கள் வாழ்ந்து வருகிறதா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தொலைதூரங்களில் உள்ள கிரகங்களில் ஆக்சிஜன் இருக்கிறதா என்பதையே நாம் கண்டுபிடிக்க முயல்கிறோம். ஆனால், இந்த ஆய்வு என்பது ஆக்சிஜன் அளவு என்பது எப்போதும் நிலையாக இருக்காது என்பதைக் காட்டுகிறது.

எனவே, தொலைதூரத்தில் இருக்கும் கிரகங்களில் வாழும் ஏலியன்கள் ஆக்சிஜனை நம்பியே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்காது. அதாவது. ஏலியன்களை நம்மைப் போல ஆக்சிஜனை சுவாசிக்காமல் வேறு வாயுக்களை சுவாசித்து உயிர் வாழக்கூடியதாகவும் இருக்கலாம் என்பதையும் இந்த ஆய்வு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+