"பேரு தூக்குதுரை.. ஊரு கொடுவிலார்பட்டி.." ஒளியவில்லை, இதுதான் என் அட்ரஸ்: அறிவித்தார் உக்ரைன் அதிபர்
கீவ்: ‛‛நான் ஒளிந்து கொள்ளவில்லை. யாருக்கும் பயப்படவில்லை'' எனக்கூறி தான் இருக்கும் இடத்தின் முகவரியை உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உக்ரைனில் இன்று 13வது நாளாக போர் நடந்து வருகிறது. ரஷ்யாவின் பெரிய ராணுவத்தை உக்ரைனின் ராணுவம், பொதுமக்களுடன் சேர்ந்து எதிர்த்து வருகிறது.
ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் ரஷ்யா அதற்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து உக்ரைனில் படைகளை முன்னேற்றி செல்கிறது.

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு
இதனால் உக்ரைன் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாய்நாட்டை காக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், 18 வயது முதல் 60 வயதுக்குள்ளான ஆண்கள், கைதிகள் என அனைவரும் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து நிற்கின்றனர். மேலும் இன்னொரு தரப்பு மக்கள் சொந்தநாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அதிபரின் பேச்சு
உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவ்வில் தங்கியுள்ளார். அவர் தொலைக்காட்சி வழியாவும், வீடியோ மூலமாகவும் பொதுமக்களிடம் அவ்வப்போது பேசி உத்வேகம் அளித்து வருகிறார். இதனால் உக்ரைன் ராணுவம், பொதுமக்கள் சோர்வடையாமல் ரஷ்யா படையை எதிர்த்து போரிடுகிறது. மேலும் உலக நாடுகளிடமும் உதவி செய்யும்படி விலாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் கோரிக்கை விடுத்து வருகிறார். இதுமட்டுமின்றி ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் மக்கள் படும் சிரமங்களை எடுத்து கூறி வருகிறார்.

சரணடைய வலியுறுத்தல்
இதையடுத்து உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ஆனாலும் ரஷ்யா தொடர்ந்து போர் நடவடிக்கையை மேற்கொள்கிறது. உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்தால் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக ரஷ்யா கூறியது. இதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவிக்கவில்லை. தற்போது இருநாடுகளுக்கம் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதுவரை போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆயினும் மக்களை வெளியேற்றுவதற்கா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

முகவரி வெளியிட்ட அதிபர்
இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ‛‛நான் கீவ் நகரில் உள்ள பாங்கோவா தெருவில் இருக்கிறேன்'' என முகவரியை வெளியிட்டார். மேலும், ‛‛நான் ஒளிந்து கொள்ளவில்லை. யாருக்கும் நான் பயப்படவில்லை. தேசப்பக்தியுடன் போராடும் எங்களை இந்த போர் வெற்றியடைய செய்யும் '' என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

நிச்சயம் சாதிப்போம்
மேலும் அவர் அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ‛‛இது திங்கட்கிழமை மாலை நேரம். இது கடினமாக நாளாகும். 12வது தினமாக போரில் எங்களின் ராணுவ படை போராடுகிறது. நான் கீவ்வில் இருக்கிறேன். எனது குழுவினர் என்னுடன் உள்ளனர். ராணுவத்தினர், டாக்டர்கள், மீட்பு படையினர், பத்திரிகையாளர் என அனைத்து மக்களும் போரில் பங்கெடுது்துள்ளனர். இதன்மூலம் நிச்சயம் நாங்கள் சாதிப்போம்'' என தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications