For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தேனா? ட்ரம்ப் மறுப்பு

ரஷ்யாவுடன் தனக்கு எந்தவித வியாபார தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவுடன் தனக்கு எந்த வியாபார தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 45-வது அதிபராக வருகிற 20 ந்தேதி பதவி ஏற்க உள்ளார் ட்ரம்ப். இதனிடையே அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வானதற்கு ரஷ்யா மறைமுகமாக உதவியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

I have no dealing with Russia, Trump

இந்த நிலையில் அதிபராக தேர்வான பிறகு முதல்முறையாக இன்று ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரஷ்யாவுடன் எனக்கு எந்த வியாபார தொடர்பும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

மேலும் எனது நிறுவனங்களை எனது இரண்டு மகன்களும் கவனித்து வருகின்றனர் எனக் கூறிய அவர், என்னைப் பற்றி தவறாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் முற்றிலும் போலியானது. எனக்கு ரஷ்யாவுடன் கடனோ, நிலுவை தொகையோ என எந்த வித தொடர்பும் இல்லை. ஓபாமா கொண்டு வந்த திட்டம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

English summary
I have no dealing with Russia, says U.S. President-elect Donald Trump
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X