போரில் சரணடைந்தால் உயிர் பிழைப்பீர்கள்! உக்ரைன் போராளிகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
மாஸ்கோ: ‛‛உக்ரைன் மரியுபோல் நகரில் உக்ரைன் போராளிகள் ஆயுதங்களை கீழேபோட்டு விட்டு சரணடைய வேண்டும். முன்னேறி வரும் ரஷ்ய படைகளை எதிர்க்கும் உக்ரேனிய போராளிகள் தங்களை பாதுகாத்து கொள்ள ரஷ்யா மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. ஆயுதங்களைக் கீழே போடும் ஒவ்வொரு உக்ரைன் வீரரும் உயிர் பிழைப்பது உறுதி'' என ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 55வது நாளை எட்டியுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடர்வதால் உக்ரைனின் நகரங்கள் உருக்குலைந்துள்ளன. தற்போது கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.

தீவிரமான போர்
அதன்படி ஒரே இரவில் 16 உக்ரைன் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஐந்து ராணுவ மையங்கள், ஒரு எரிபொருள் கிடங்கு மற்றும் மூன்று வெடிமருந்து கிடங்குகள் சிதைக்கப்பட்டுள்ளன. மேலும் கார்கிவ், சபோரிஜியா, டொனெட்ஸ்க் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளிலும், மைக்கோலேவ் துறைமுகத்திலும் ரஷ்யா சார்பில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

உக்ரைன் அதிபரின் உரை
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி மக்களிடம் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார். நேற்று காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது, "கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது.ரஷ்யா நேற்று ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் அங்குள்ள நகரங்களைத் தாக்கியது. டான்பாஸ்க்கான போர் தொடங்கிவிட்டது" என தெரிவித்தார்.

ரஷ்யா எச்சரிக்கை
இந்நிலையில் தான் உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் வீரர்கள் தங்களது எதிர்ப்பை கைவிட்டு சரணடைய வேண்டும் என ரஷ்யா திடீரென அறிவுரையுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் போராளிகள் விவேகம் இல்லாத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதை நிறுத்துவதற்கு உரிய உத்தரவுகளை வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் பிறப்பிக்கவில்லை.

உயிர் பிழைப்பது உறுதி
இதனால் மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும். மரியுபோலில் முன்னேறி வரும் ரஷ்ய படைகளை எதிர்க்கும் உக்ரேனிய போராளிகள் பேரழிவில் சிக்கி உள்ளனர். இதில் பாதுகாத்து கொள்ள ரஷ்யா மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. ஆயுதங்களைக் கீழே போடும் ஒவ்வொரு உக்ரைன் வீரரும் உயிர் பிழைப்பது உறுதி" என கூறப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications