For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் முடியட்டும்.. இந்தியாவுடனான உறவு மேம்படும்.. இம்ரான்கான் நம்பிக்கை

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: லோக்சபா தேர்தல் முடியட்டும். இந்தியாவுடனான உறவு மேம்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகிவிட்டனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான்கான் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் என்ன நடைபெற்றாலும் அது பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர்.. சீனாவில் உள்ள 200 யு.எஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகை! அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர்.. சீனாவில் உள்ள 200 யு.எஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகை!

வலுப்படுத்த முயற்சி

வலுப்படுத்த முயற்சி

அந்நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படும். இதனால் அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஈரானுடன் பாகிஸ்தானுக்கு நல்ல உறவு உள்ளது. அதை வலுப்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

உறவு மேம்படும்

உறவு மேம்படும்

இந்தியாவுடனான உறவு மட்டும்தான், பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை ஆகும். எனினும் இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல்களுக்குப் பிறகு அந்த நாட்டுடனான உறவு மேம்படும் என நாங்கள் நம்புகிறேம்.

முக்கிய பங்கு

முக்கிய பங்கு

சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தால் இதில் பங்கேற்றுள்ள நாடுகளிடையே சிறப்பான தொடர்புகள் ஏற்படும். பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் மற்றும் சீனாவின் சின்சியாங் பிராந்தியம் இடையே தகவல் தொடர்பு அதிகரிக்க இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

பரபரப்பு

பரபரப்பு

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்கப்படும் என இம்ரான் கான் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

English summary
Pakistan PM Imran Khan says that India and Pakistan relationship will be enhanced after Loksabha elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X