For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதும் போதும் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குங்க...ரஷ்யா உக்ரைனுக்கு இந்தியா வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

ஜெனிவா: உக்ரைனில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தங்களது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக தற்போது நடந்து முடிந்துள்ள ஐநா கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியா தரப்பிலிருந்து பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

ஐநா சபையின் 77வது கவுன்சில் கூட்டம் 15 தலைவர்களுடன் ஐரோப்பா மற்றும் பிரான்சின் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா தலைமையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில்தான் இந்தியா மேற்குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தியுள்ளது.

மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய - உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்! மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய - உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்!

அகதிகளான மக்கள்

அகதிகளான மக்கள்

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியது. இந்த போர் காரணமாக சுமார் 1.40 கோடி மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் இருந்துள்ளன. மேலும் இரு அர்த்தமற்ற போர் என ஐநா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். உலகம் அணு ஆயுதங்கள் குறித்து இதுவரை விவாதிக்காமல் இருந்த நிலையில், தற்போது இந்த போர் காரணமாக அணு ஆயுதங்கள் குறித்த விவாதங்கள் உருவாகியுள்ளன என்று ஆண்டோனியோ கட்டரஸ் கூறியுள்ளார்.

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம்

நேற்று(செப்.22) ஐநா சபையின் 77வது கவுன்சில் கூட்டம் 15 தலைவர்களுடன் ஐரோப்பா மற்றும் பிரான்சின் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா தலைமையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில்தான் மேற்குறிப்பிட்ட கருத்தை ஐநா பொதுச்செயலாளர் கட்டரஸ் கூறினார். இதனையடுத்து இந்தியா தரப்பிலிருந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்துவதாக" கூறினார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அவர் பேசியதாவது, "உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே இருக்கும் விரோதங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும். அதே நேரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதைப்போல இது போரின் காலகட்டம் அல்ல" என்று ஜெயசங்கர் கூறியுள்ளார். மேலும், "இந்த போரினால் உலக நாடுகளும் பாதிக்கப்படுகின்றன" என்றும் கூறினார்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

"உணவு பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றின் பற்றாக்குறை, விலையுயர்வுக்கு இந்த போர்தான் காரணம்." என்பதையும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். போர் தொடங்கிய இந்த 7 மாதங்களில் சுமார் 14,059 பேர் உயிரிழந்துள்ளனர். 8,292 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்ட கால நட்பு இருக்கும் நிலையில் தற்போதுவரை ரஷ்யாவின் நடவடிக்கையை இந்தியா வெளிப்படையாக எதிர்க்கவில்லை. இச்சூழலில் ஜெய்சங்கரின் கருத்து சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
As the Russian troops have been carrying out their military operations in Ukraine for more than 7 months, this has been discussed in detail in the ongoing UN Council meeting. Speaking from the Indian side, External Affairs Minister Jaishankar said that the Indian side is insisting that the war should end immediately. The 77th Council meeting of the UN General Assembly concluded with 15 leaders chaired by Minister of Foreign Affairs of Europe and France Catherine Colonna. It was in this meeting that India emphasized the above point.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X