முக்கிய கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை.. பாகிஸ்தானிலிருந்து வந்த குட் நியூஸ்! இந்தியாவுக்கு நிம்மதி!
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகள் நிம்மதியடைந்திருக்கின்றன.
பேச்சுவார்த்தை தற்போது நிபுணர் நிலையை எட்டியிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. நிபுணர் நிலைக்கு பேச்சுவார்த்தை சென்று விட்டது எனில், இரு நாடுகளும் பொதுவான உடன்படிக்கைக்கு வர தயாராகி விட்டார்கள் என்று அர்த்தம்.

நிபுணர் குழு என்றால் என்ன?
பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம்தான் இந்த நிபுணர் குழு. இரு நாடுகளும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துவிட்டது என்பதற்கான அர்த்தம்தான் இது. இந்த குழு இரு நாடுகளும் கொடுத்த டிமாண்ட்கள் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை ஆய்வு செய்யும்.
ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும், அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஈரான் மீதான கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் டிமாண்ட்களாக இருக்கின்றன. நீரிணையை திறக்க வேண்டும் எனில், ஒரு நாளைக்கு எத்தனை கப்பல்களை அனுமதிக்க வேண்டும், அதற்கு எவ்வளவு கட்டணம் பெறப்பட வேண்டும்? என்பதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்த நிபுணர் குழு அறிக்கை கொடுக்கும்.
அறிக்கை தாக்கல்
அதேபோல வளைகுடா நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக கத்தாரில் முடங்கியிருக்கும் பல பில்லியன் டாலர் தொகையை எந்த வங்கி வழியாக விநியோகிப்பது? என்பது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். பின்னர் உடன்படிக்கை கையெழுத்துக்கு போகும்.
நிபுணர் குழுவின் வேலை
அதற்கு முன்னர், நிபுணர் குழுவின் அறிக்கையை தரப்பும் படித்து பார்க்கும். இதில் இரு தரப்புக்கும் உடன்படாத சில அம்சங்கள் இருக்கும். குறிப்பாக லெபனானில் இஸ்ரேலின் தலையீட்டை அமெரிக்க கண்டுக்கொள்ளாது. ஆனால், ஈரான் இதை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, இப்படி முரண்படும் இடங்களை கண்டு, இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் மாதிரியான அம்சங்களை நிபுணர்கள் குழு உருவாக்கும்.
இப்படி அனைத்தையும் மாற்றியமைத்த பின்னர், உடன்படிக்கை உருவாக்கப்படும். இதில் இரு நாடுகளும் கையெழுத்து போட்டால் வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாமாபாத் உடன்படிக்கை அமல்படுத்தப்படும். பின்னர் ஐநா சபையில் இந்த உடன்படிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்படும்.
இந்தியாவுக்கு நிம்மதி
ஐநாவிலும் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டால் சர்வதேச அளவில், போர் நிறுத்தம் சாத்தியமாக்கப்படும். போர் நிறுத்தப்பட்டால் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல நடக்கும். இதனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் எல்பிஜி நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும். அதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் அச்சம் இருக்காது. ஐநாவில் நிறைவேற்றப்படும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஏப்.22ம் தேதிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானால் நிலைமை அன்றைய தேதியிலிருந்தே மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications