அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெல்பர்ன்: உலக அளவில் அமைதியான நாடுகள் குறித்து எடுக்கப்பட்ட பட்டியலில் இந்திய 137வது இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை அந்த நிறுவனம் மேற்கொண்டது.

India ranked 137 in Global Peace Index report

மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மிகுந்த அமைதி குறைந்த நாடாக இடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன

இதில் அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன. இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் 152 வது இடத்தையும். ஆப்கானிஸ்தான் 162 வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளது கவனிக்கத்தக்கது.

தீவிரவாத அமைப்புகளின் வன்முறையால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India was on ranked 137 a Global Peace Index. In a ranking of 163 countries, compiled by global think tank Institute for Economics and Peace.
Please Wait while comments are loading...