மாலத்தீவில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி.. ஐநா தலையிட இந்தியா வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவில் நிலவும் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஐநா தலையிட வேண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டது. அதனை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்துவிட்டார்.

India urges UN to clear political crisis in Maldives

மேலும் கடந்த திங்கள் கிழமை முதல் 15 நாட்களுக்கு அவசர நிலையையும் அதிபர் அறிவித்தார். அவசரநிலையை பிரகடனப்படுத்திய சில மணி நேரங்களில் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் மாலத்தீவில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் மாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அதிபர் அப்துல்லா தனது தூதர்களை பாகிஸ்தான், சவுதி, சீனா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினார். ஆனால் மாலத்தீவு உள்விவகாரங்களில் தலையிட சீனா மறுத்துவிட்டது.

அதே நேரத்தில் மாலத்தீவு நெருக்கடிக்கு தீர்வு காண சீனா தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாலத்தீவில் சகஜ நிலை ஏற்பட ஐ.நா. சார்பில் மேற்பார்வையாளரை அனுப்பி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India urges UN to clear political crisis in Maldives. Maldives President Abdulla yamin declared emergency.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற