For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னாப்பிரிக்க நிதியமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் நியமனம்

Google Oneindia Tamil News

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் நிதித்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் கோவர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று நிதி அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கு முன்பாக அந்நாட்டின் நிதியமைச்சராக இருந்த லண்ஹலா நினேவின் சில தவறான அணுகுமுறையால் அந்நாட்டின் பங்கு வர்த்தகம் அதல பாதாளத்துக்குச் சென்றது. இது அந்நாட்டு மக்களிடையே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதனையடுத்து அதிரடியாக நினே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை டேவிட் வான் ரூயின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Indian Origin Pravin Govarthan appointed as South Africa's FM

இந்நிலையில், டேவிட் வான் ரூயின் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு 2009-14ல் அந்நாட்டின் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் கோவர்தனை மீண்டும் நிதியமைச்சராக நியமித்து அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு கோவர்தன் கூட்டுறவு ஆட்சி மற்றும் பாரம்பரிய விவகாரங்கள் துறை அமைச்சர், தென் ஆப்பிரிக்காவின் வருமான வரித்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார்.

English summary
Indian Origin Pravin Govarthan appointed as South Africa's finance minister, within a week 3 finance ministers has been changed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X