For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் தேசியப் பிரச்சினையாக உருவெடுக்கும் ‘பாலியல் பலாத்காரம்’... ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் ப்யூ ஆய்வு மையம் எடுத்த ஒரு ஆய்வில், இந்தியர்களில் பெரும்பாலானோர் பாலியல் பலாத்காரத்தையே தேசியப் பிரச்சினையாக கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டெல்லியில 23 வயது இளம் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி கடைசியில் உயிரிழந்த சம்பத்தைத் தொடர்ந்து இந்திய மக்கள் பலாத்காரத்தைத்தான் மிக முக்கியமான தேசிய பிரச்சினையாக கருதுவதாக இந்த மையம் தெரிவிக்கிறது.

பாலியல் பலாத்காரத்தை முற்றிலும் தடுக்கவும், ஒழிக்கவும் முடியாத வகையில் இந்த சட்ட திட்டங்கள் இருப்பதாக மக்கள் கருதுவதாகவும் இந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கருத்துக்கணிப்பு...

கருத்துக்கணிப்பு...

இதுதொடர்பாக 2013ம் ஆணடு டிசம்பர் 7ம் தேதி முதல் 2014, ஜனவரி 12ம் தேதி இந்தியாவில் தேசிய அளவிலான கருத்துக் கணிப்பை இந்த மையம் நடத்தியது.

முக்கிய தேசியப் பிரச்சினை...

முக்கிய தேசியப் பிரச்சினை...

அதில் பத்தில் 9 இந்தியர்கள், பலாத்காரம்தான் முக்கியமான தேசிய பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நீர்த்துப் போன சட்டங்கள்...

நீர்த்துப் போன சட்டங்கள்...

பத்தில் எட்டு பேர் அதாது 82 சதவீதம் பேர் இது முக்கியமான பிரச்சினையாக மாறி வருவதாக குறிப்பிடடனர். நான்கில் 3 பேர், இந்தியாவில் உள்ள சட்டத் திட்டங்கள் மிகவும் நீர்த்துப் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போலீசார் மீது தான் குற்றம்...

போலீசார் மீது தான் குற்றம்...

78 சதவீதம் பேர் காவல்துறை சரியான முறையில் செயல்படுவதில்லை என்றும், குற்றவாளிகளிடம் அவர்கள் கடுமை காட்டுவதில்லை என்றும் குறைபட்டுள்ளனர்.

கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு...

கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு...

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்துக்குப் பின்னர் இந்தியாவில் பாலியல் பலாத்கரா சம்பவங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. நகர்ப்புற பெண்களின் பாதுகாப்புகேள்விக்குரியதாக மாறியுள்ளது.

சட்டங்கள்....?

சட்டங்கள்....?

பத்தில் ஒருவர்தான், பலாத்காரத்துக்கு எதிராக தற்போதைய சட்டங்களே போதுமானது எனறு கூறியுள்ளார். 6 சதவீதம் பேர் போலீஸார் வழககுகளை சரியாக விசாரிப்பதாக கூறியுள்ளனர். அதேசமயம், 18 சதவீதம் பேர் பலாத்காரங்களை சட்டம் போட்டு தடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் சட்டம் தனது கடமையா சரியாக செய்வதாக கருத்து தெரிவித்துள்னர்.

பொதுமக்கள் கருத்து...

பொதுமக்கள் கருத்து...

பாலியல் பலாத்காரம் மிக பெரிய பிரச்சினை என்று 91 சதவீத ஆண்களும், 89 சதவீத பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல நகர்ப்புற ஆண்களில் 89 சதவீதம் பேரும், ஊரகப் பகுதி ஆண்களில் 91 சதவீதம் பேரும் இதை முக்கியப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளனர்.

கட்சியினர் கருத்து...

கட்சியினர் கருத்து...

கட்சியினர் மத்தியில், நடப்பு சட்டங்கள் சரியில்லை என்று 77 சதவீத பாஜக ஆதரவாளர்களும், 75 சதவீத காங்கிரஸ் ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர். போலீஸ் சரியில்லைஎன்று 79 சதவீத பாஜகவினரும், 80 சதவீத காங்கிரஸாரும் தெரிவித்துள்ளனர்.

7 மொழிகளில்....

7 மொழிகளில்....

18 வயதுக்கு மேற்பட்ட 2464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர்.இந்த கருத்துக் கணிப்பை தமி்ழ், இந்தி, தெலுங்கு, ஒடியா, மராத்தி, கன்னடா, குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தியுள்ளனர்.

15 மாநிலங்களில்...

15 மாநிலங்களில்...

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட 17 மாநிலங்களில் 15 மாநிலங்களில் இது நடத்தப்பட்டுள்ளது. இதில் கேரளா, அஸ்ஸாம் ஆகியவை இடம் பெறவில்லை.

English summary
A national poll conducted by the Pew Research Center between December 7, 2013, and January 12, 2014 shows that nine-in-ten Indians agree that the crime of rape is a “very big problem” in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X