For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 லட்சம் டாலர் சம்பளம்.. 1 லட்சம் டாலர் பயணப்படி... 6000 கொலை மிரட்டல்கள்: ஒபாமா சுவாரஸ்யங்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஆண்டிற்கு 4 லட்சம் டாலர் சம்பளமும், ஒரு லட்சம் டாலர் பயணப்படியும் பெறுவதாகவும், அதே சமயத்தில் சராசரியாக 6 ஆயிரம் கொலை மிரட்டல்களை எதிர் கொள்வதாகவும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் உசைன் ஒபாமா. 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.

அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இது தவிர ஒபாமைப் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவையாவன...

வெள்ளை மாளிகை....

வெள்ளை மாளிகை....

இரண்டாவது முறை அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், அலுவலகமாகவும் வெள்ளை மாளிகை விளங்குகிறது. அம்மாளிகை 132 அறைகள், 35 குளியல் அறைகளுடன் 18 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. அதிபரின் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு மாளிகை...

மற்றொரு மாளிகை...

இது தவிர வாஷிங்டனில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கேடோக்டின் மலையில் அமைக்கப்பட்டுள்ள 'கேம்ப் டேவிட்' ஓய்வு இல்லத்திலும், 70 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பில் 20 படுக்கையறைகள், 35 குளியல் அறைகள் உள்பட 119 அறைகள் கொண்ட, வெள்ளை மாளிகையைவிட அளவில் பெரியதான 'ப்ளெய்ர்' இல்லத்திலும் ஒபாமா தங்கிக் கொள்ள அனுமதி உண்டு.

பிரத்யேக விமானங்கள்...

பிரத்யேக விமானங்கள்...

அதிபரின் தொலைதூர வெளிநாட்டு பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானமும், குறைந்த தூரம் கொண்ட பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட 'மெரைன் ஒன்' ஹெலிகாப்டரும் இரண்டுமே 70 பேரை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டவை.

சிறப்பு விமானம்...

சிறப்பு விமானம்...

கடந்த 2008-ம் ஆண்டு ஒபாமாவுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போயிங்-747 ரக விமானத்தின் 'காக் பிட்'டில் அமர்ந்திருக்கும்போது, விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த மாற்றமும் உணரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மினாத்தில் அதிபர் உபயோகிக்கும் மேஜை எதிர்விசையில் இயங்கி எப்போதுமே சம நிலையில் உள்ளது போல் இருக்கும். அவசர சிகிச்சைக்கு என தயார் நிலையில் மருத்துவ அறையும் இந்த விமானத்தினுள் உண்டு.

நாட்டு நடப்பு ஆர்வம்...

நாட்டு நடப்பு ஆர்வம்...

அதிபர் பயணம் செய்யும்போது, உள்ளே இருக்கும் லெதர் சோபாவில் எப்போதுமே 5 நாளிதழ்கள் வைக்கப்பட்டிருக்குமாம். பொதுவாக பயணத்தின்போது ஈ.எஸ்.பி.என். உள்ளிட்ட செய்தி சேனல்களை பார்ப்பதில் ஒபாமா, அதிக ஆர்வம் காட்டுவாராம்.

நவீன தொலைத்தொடர்பு வசதி...

நவீன தொலைத்தொடர்பு வசதி...

நாட்டு மக்களிடையே விமானத்தில் இருந்தபடியே பேசுவதற்கு வசதியாக, அனைத்து நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் இந்த விமானத்தில் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பயணிக்கும்போது, விமானிகளிடமிருந்து எந்த அறிவிப்பும் ஒலிபரப்பப்பட மாட்டாது.

மரணத்திற்குப் பின்னால்...

மரணத்திற்குப் பின்னால்...

அதிபரின் மரணத்திற்கு பின்னர் அவரது சவப்பெட்டியை விமானத்தில் கொண்டு செல்ல நேர்ந்தால், அதற்கேற்ப உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றம் செய்ய முடியும். விமானத்தின் நடுப்பகுதியில், அதிபரின் சவப்பெட்டியை ஏற்றி, இறக்கும் அளவிற்கு பெரிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்புக் கார்...

சிறப்புக் கார்...

அதிபரின் சாலைவழி பயணத்துக்கென 'கெடிலாக் ஒன்' என்றழைக்கப்படும் சிறப்பு கார் உபயோகிக்கப்படுகிறது. நவீன தொலை தொடர்பு சாதனங்கள், தீயணைப்பு கருவி, ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி போன்ற வசதிகள் இந்த காரினுள் உள்ளன. டயர் பஞ்சரான நிலையிலும் நிற்காமல் ஓடும் வகையில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி நேரம்....

உடற்பயிற்சி நேரம்....

தினமும் காலை 7 மணிக்கு கண் விழிக்கும் ஒபாமா, 7.30 மணிக்கு 'ஜிம்'மிற்குள் நுழைகிறார். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் ஒபாமா, குளியலுக்குப் பின், காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு எல்லா நாளிதழ்களையும் புரட்டி, முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளை பார்வையிடுகிறார்.

நிதான நடவடிக்கை...

நிதான நடவடிக்கை...

லிப்ட் வழியாக தனது ஓவல் ஆஃபீஸ் வந்து சேரும் ஒபாமா, பாதுகாப்பு தொடர்பான செய்திகளை முதலில் அறிந்துக் கொள்வார். ஆரம்ப நாட்களில் ரகசிய செய்திகளை கேட்டு ஆச்சரியமடைந்த அவர், இப்போதெல்லாம் முன்னர் போல் ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதில்லை என அவரது அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரான பிறகு....

அதிபரான பிறகு....

வாஷிங்டனில் இருக்கும்போது அரைநாள் பொழுதை தனது அலுவலகத்தின் உள்ளேயே செலவிடுகிறார். முதன்முறையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்-ஷை சந்திக்க இந்த அலுவலகத்தினுள் நுழைந்த அவர், இரண்டாம் முறையாக, அதிபராக பதவியேற்ற பின், தனது முதல் பணி நாளின்போதுதான் மீண்டும் இந்த அலுவலகத்திற்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் ரசனைப்படி...

தன் ரசனைப்படி...

ஒபாமா அதிபராக பதவியேற்ற அலுவலகத்தில் ஜார்ஜ் புஷ் காலத்தில் வைக்கப்பட்டிருந்த 'ஆயில் பெயிண்டிங்' படங்களை எல்லாம் அகற்றி விட்டு, தன் ரசனைக்கேற்ப மெதுமெதுவாக சில மாற்றங்களை செய்தார். அவர் பதவியேற்ற வேளையில் அமெரிக்க பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன்...

குடும்பத்துடன்...

இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு வரை உள்ள நேரத்தை தனது குடும்பத்தாருடன் கழிக்கும் ஒபாமா, பின்னிரவு 1 மணியளவில் தூங்குகிறார். 6 மணி நேர உறக்கத்திற்கு பின்னர், மீண்டும் மறுநாளுக்கான அலுவல்கள் காலை 7 மணியில் இருந்து தொடங்குகின்றன.

நோபல் பரிசு செய்தி...

நோபல் பரிசு செய்தி...

உறங்கும்போது, அவரை எழுப்பி யாரும், எந்த தகவலும் சொல்வதில்லை. அவசர தகவல்கள் ஏதுமிருப்பின், அவரது முதல் நிலை உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். சூழ்நிலைக்கேற்ப அவர்களே முடிவெடுப்பார்களாம். உறக்கத்தில் இருந்த ஒபாமாவை, அவரது உதவியாளர்கள் ஒரேயொரு முறை மட்டும், ஒரு முக்கிய தகவலை கூறுவதற்காக எழுப்பியுள்ளனர். 2009-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9ம் தேதி, அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை உதவியாளர்கள் அவருக்கு தெரிவித்தனர்.

சுருக்கமாகப் பேசும் ஒபாமா...

சுருக்கமாகப் பேசும் ஒபாமா...

பொதுவாக அதிகமாக பேசும் பழக்கம் இல்லாத ஒபாமா ரத்தின சுருக்கமாக பேசக் கூடியவர். அடுத்தவர்களை பேசவிட்டு, அதிலிருக்கும் நல்ல கருத்துகளை தேர்வு செய்து கொள்வாராம் ஒபாமா. பல்வேறு சாதக-பாதகங்களை சீராய்ந்து முடிவெடுப்பதையே அவர் அதிகம் விரும்புகிறார்.

பிடித்த இடங்கள்....

பிடித்த இடங்கள்....

வெள்ளை மாளிகையில் உள்ள 'ட்ருமேன் பால்கனி', தெற்கே உள்ள பசுமையான புல்வெளி, ஜெஃபர்ஸன் நினைவகத்தின் எதிரே உள்ள வாஷிங்டன் நினைவிடம் ஆகியவை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்தமான சில இடங்கள்.

சம்பளத்திற்கு மட்டும் வரி....

சம்பளத்திற்கு மட்டும் வரி....

அமெரிக்க அதிபருக்கு சம்பளமாக ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்கள் வழங்கப்படுகின்றது. மேலும் பயணப்படிக்கென 1 லட்சம் டாலர்களும், அலுவலக விழாக்களுக்கென 19 ஆயிரம் டாலர்களும் உண்டு. சம்பள பணத்திற்கு மட்டும் வரிப்பிடித்தம் செய்யப்படுகின்றது. மற்ற படிகளுக்கு வரி கிடையாது.

ஓய்வூதியம்....

ஓய்வூதியம்....

2008-மார்ச் மாத நிலவரத்தின்படி, முன்னாள் அதிபர்களுக்கு ஆண்டுதோறும் ஓய்வூதியமாக 1 லட்சத்து 91 ஆயிரத்து 300 டாலர்கள் தரப்படுகின்றது. அவர்களின் அலுவலகத்திற்கான இடமும், ஊழியர்களுக்கான சம்பளமும், அலுவலக செலவினங்களுக்கான நிதியும், பயணப்படியும் அமெரிக்க அரசு வழங்குகின்றது.

அமெரிக்க ரகசிய போலீசார்....

அமெரிக்க ரகசிய போலீசார்....

2003-ஆம் ஆண்டிலிருந்து, அதிபரின் பாதுகாப்பு பணிக்கு அமெரிக்க ரகசிய போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பையும் இவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர்.

கொலை மிரட்டல்கள்....

கொலை மிரட்டல்கள்....

பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாழும் ஒபாமா, மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 கொலை மிரட்டல்களை அமெரிக்க அதிபர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The American President Obama is getting four lakh dollar as monthly pay for his President job and one lakh for convienence. He is getting six thousand threatens for an year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X