For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் இல்லை.. பதறியடித்த ஹேக்கர்கள்.. உலகம் முழுக்க முடங்கிய முக்கிய வெப்சைட்கள்.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க பல்வேறு முக்கிய இணையதளங்கள், அமேசான் உள்ளிட்ட தளங்கள், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட தளங்கள் இன்று திடீரென முடங்கியதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுக்க பெரிய இணையதளங்கள், வலைதள நிறுவனங்கள் தங்களுக்கு என்று மெயின் சர்வர் ஒன்றை வைத்து இருக்கும். உதாரணமாக அமேசான் நிறுவனத்திற்கு தனியாக மெயின் சர்வர் உள்ளது. ஆனால் இந்த மெயின் சர்வரில் இருந்து உலகம் முழுமைக்கும் அமேசான் வழங்கப்படாது.

மாறாக உலகின் பிற பகுதிகளில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் இடைத்தரகர்கள் போல சிறு சிறு சர்வர்களை அமைத்து, அமேசான் தளத்தை மற்ற நாடுகளுக்கு வழங்கும், உலகின் பெரிய தளங்கள் எல்லாம் இப்படித்தான் செயல்படுகிறது.

பிராக்சி

பிராக்சி

இது போன்ற தளங்கள் பிராக்சி சர்வர் தளங்கள் அல்லது சிடிஎன் தளங்கள் என்று அழைக்கப்படும். சிடிஎன் என்றால் Content Delivery Network. அதாவது கண்டெண்ட்களை வழங்க கூடிய அமைப்பு. ஒரு தளத்தில் இருக்கும் தகவல்களை மக்களிடடம் கொண்டு சேர்க்கும் இடைப்பட்ட அமைப்பு இதுதான். உலகம் முழுக்க நிறைய பிராக்சி தளங்கள் உள்ள நிலையில் பாஸ்ட்லி சிடிஎன் பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாஸ்ட்லி சிடிஎன்

பாஸ்ட்லி சிடிஎன்

இந்த பாஸ்ட்லி சிடிஎன் உலகின் பல்வேறு இடங்களில் சர்வர்களை வைத்துள்ளது. இந்தியாவில் ஒருவர் தி கார்டியன் என்று சர்ச் செய்தால், உடனே பாஸ்ட்லி சிடிஎன்தான் அந்த லிங்கை ஓபன் செய்ய உதவும். இடைப்பட்ட சர்வர் போல இது செயல்படும். இந்த நிலையில் பாஸ்ட்லி சிடிஎன்னில் இன்று திடீரென கான்பிகரேஷன் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.

சர்வர்

சர்வர்

இதன் சர்வரில் திடீரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக உலகம் முழுக்க மொத்தமாக பல்வேறு நாடுகளில் பாஸ்ட்லி சிடிஎன் சர்வர் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த சர்வர் மூலம் சேவா வழங்கி வந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ரெட்டிட், அமேசான், ஸ்டார்க் ஓவர்புலோ, பேபால், வைமோ, சிஎன்என், எச்பிஓ மேக்ஸ், ஹுலு, நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் ஆகிய தளங்கள் இதனால் முடங்கியது.

இந்தியா

இந்தியா

இந்தியாவிலும் சில சிறு சிறு நிறுவன தளங்கள், அமேசான் ஆகியவை முடங்கியது. இந்த நிறுவனங்கள் எல்லாம் பாஸ்ட்லி சிடிஎன் சர்வர் மூலம் சேவை வழங்கியது. இதன் சர்வரில் ஏற்பட்ட சிறு மாற்றம் காரணமாக இணையம் முடங்கியது. பாஸ்ட்லி சிடிஎன் சர்வரை பயன்படுத்தாத ஆப்பிள் போன்ற நிறுவன தளங்கள் சிக்கல் இன்றி இயங்கி வருகிறது.

மாற்றம்

மாற்றம்

தற்போது ஒவ்வொரு பாஸ்ட்லி சிடிஎன் சர்வராக சரி செய்யப்பட்டு வருவதால், விரைவில் மொத்தமாக இன்னும் சில நிமிடங்களில் இந்த பிரச்சனை சரி ஆகும். அதே சமயம் பாஸ்ட்லி சிடிஎன் சர்வரில் இந்த திடீர் கான்பிகரேஷன் மாற்றம் ஏற்பட காரணம் என்ன என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் ஹேக்கர்கள் வேலை இருக்குமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பிரபல ஹேக்கிங் குழுவான டெப்கான் நாங்கள் இதற்கு பொறுப்பில்லை என்று கூறியுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

பல காலமாக இயங்கி வரும் ஹேக்கிங் குழு, நாங்கள் இதை ஹேக் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ரஷ்யா ஹேக்கிங் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2021ல் அமெரிக்க அதிகபட்ச சைபர் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இதனால் ரஷ்யா மீதும், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Internat Outage: Proxy servers of CDN fastly affected is the reason behind the sudden shutdown in many countries.;
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X