இவரே வைப்பாராம்.. இவரே எடுப்பாராம்.. அமெரிக்கா விமானியை காப்பாற்றியதாக டிரம்ப் சொன்னது பொய்! ஈரான்
தெஹ்ரான்: சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து, தப்பிய விமானியை, அமெரிக்கா பத்திரமாக ஈரானுக்குள் இறங்கி மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஈரான் அதனை மறுத்துள்ளது. தெற்கு இஸ்ஃபஹான் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட விமான நிலையம் ஒன்றில் அமெரிக்கா திட்டமிட்ட இந்த மீட்புப் பணி முற்றிலும் முறியடிக்கப்பட்டதாக ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானங்கள் மீது அட்டாக்
இந்த நடவடிக்கையின் போது அமெரிக்காவிற்குச் சொந்தமான இரண்டு சி-130 (C-130) போக்குவரத்து விமானங்கள் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. இதற்கான ஆதாரமாக, பாலைவனப் பகுதியில் சிதறிக் கிடக்கும் விமானக் கழிவுகளின் வீடியோ காட்சிகளையும் ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மீட்புப் பணியின் போது நடந்த தாக்குதல்களில் ஈரானின் தென்மேற்குப் பகுதியில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களா அல்லது ராணுவ வீரர்களா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
ஈரான் மறுப்பு
கடந்த வெள்ளிக்கிழமை முதல், அந்த அமெரிக்க விமானியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் துப்பாக்கிகள் மற்றும் கொடிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன. தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு முரண்பட்ட தகவல்கள் உள்ளன.
முரண்பட்ட தகவல்கள்
அமெரிக்க தரப்பில், விமானி மீட்கப்பட்டுவிட்டார், அவர் நலமுடன் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஈரான் மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது, அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இருப்பினும் விமானி பிடிபட்டாரா இல்லையா என்பதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.
-
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications