For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் 2000கிமீ தூரம் தாக்கும் 30 ஏவுகணைகளின் அணிவகுப்பு: எதிரிகளுக்கு எச்சரிக்கையா?

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரானில் சுமார் 2000கி.மீ தூரம் சென்றுத் தாக்கும் 30 ஏவுகணைகளைன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது ஈரானை தாக்க நினைக்கும் பிற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் இருந்தது.

ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் அதிகளவில் சேமிக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அந்நாட்டின் மீது குற்றம் சாட்டி வருகின்றன. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது சில பொருளாதாரத்தடைகளை அமல் படுத்தியது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது.

ஆனால், தன் மீது குறை கூறும் அண்டை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது ஈரான். இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பில் சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 30 ஏவுகணைகளை ட்ரக்குகளில் வைத்து அணிவகுப்பு நடத்தியது ஈரான். இதன் மூலம் தனது பலத்தை காட்டி, தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் ஒரு எச்சரிக்கை மணி விடுத்துள்ளது எனச் சொல்லப்படுகிறது.

மேலும், அணிவகுப்பில் 12 செஜில் மற்றும் 18 காதர் ஏவுகணைகள் இடம்பெற்றன. இந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரேபிய ஏவுதளங்களை குறிவைத்து தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரஹானி கூறும்போது, ‘காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் தற்காப்புக்காக மட்டுமே. கடந்த 200 வருடங்களில் எந்த ஒரு நாட்டையும் ஈரான் தாக்கியது கிடையாது' எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

English summary
Iran paraded 30 missiles with a nominal range of 2,000 km on Sunday, the first time it had displayed so many with a stated capacity to hit Israeli targets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X