For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கான் எல்லையில் தாலிபான்கள்- ஈரான் ராணுவம் இடையே திடீர் மோதலால் பதற்றம்!

Google Oneindia Tamil News

காபூல்: ஈரான் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதால் ஆப்கான்-ஈரான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Afghan-க்கு உதவ துடிக்கும் India-வுக்கு Condition போட்ட Pakistan | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான்கள் கை ஓங்கியது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது ஈரான் உடனடியாக தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை.

     3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

    தாலிபான்கள் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை சர்வதேச நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதனால் இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகளுடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாலிபான்கள்-ஈரான் உறவு

    தாலிபான்கள்-ஈரான் உறவு

    கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஈரான் ஆலோசனை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. டெஹ்ரானில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றன. ஆனால் தாலிபான்களுக்கு ஈரான் அழைப்பு விடுவிக்கவில்லை. இருப்பினும் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்புத் தூதர் ஹாசன் கசேமி குயோமி தலைமையிலான ஈரான் தூதுக் குழு ஆப்கானிஸ்தான் சென்றது. அங்கு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

    தாலிபான்கள் தாக்குதல்

    தாலிபான்கள் தாக்குதல்

    இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் ஈரான் விவசாயிகள் எல்லை தாண்டி நுழைவதாக நினைத்து தாலிபான்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். தங்களது நாட்டு விவசாயிகள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஈரான் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து ஈரான் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

    ஈரான் பதிலடி

    ஈரான் பதிலடி

    தாலிபான்களுக்கு பதிலடியாக ஈரான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். ஈரான் செய்தி நிறுவனங்களில் ஒன்றான டாஸ்னிம்(Tasnim), ஈரானின் ஹிர்மாத் கவுண்ட்டி பகுதியில் உள்ள Shaghalak கிராமத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

    ஈரான் விளக்கம்

    ஈரான் விளக்கம்

    இதனைத் தொடர்ந்து தவறான புரிதலால் இந்த மோதல் நிகழ்ந்ததாக தாலிபான்களும் ஈரான் ராணுவ தரப்பும் விளக்கம் அளித்திருக்கின்றன. இந்த மோதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் கதீப்ஜடே கூறுகையில், எல்லை பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த மோதல் நிகழ்ந்தது என்று பொதுவாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிக்கையில் தாலிபான்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை.

    English summary
    Clashes had erupted between Iranian soldiers and Taliban forces near the Afghanistan-Iran border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X