Iran War: அடங்காத டிரம்ப்.. தீப்பிழம்புடன் சீறிப்பாயும் ஏவுகணைகள்.. ஈரானுக்கு போன கடும் வார்னிங் - வீடியோ
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் தாக்குதலை நேற்று தொடங்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானில் மன்னராட்சி ஒழிந்து ஈரான் இஸ்லாமிக் குடியரசு நாடாக மாற காரணமே உத்தரபிரதேசத்தில் இருந்து அங்கு சென்றவர் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை தான். அந்த நபர் யார்? அவருக்கும், ஈரானின் உச்சப்பட்ச தலைவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நட்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுடன் ஈரானுக்கு மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டை தொடர்ந்து நேற்று அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்துவதாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாமல் இழுத்தடித்து வந்ததால் இந்த போர் தொடங்கப்பட்டது.

கமேனி கொல்லப்பட்டார்
இதில் ஈரான் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அயதுல்லா அலி கமேனி தனது அலுவலக இல்லத்தில் நேற்று இருந்தார். அப்போது அங்கு அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். . இதனை இஸ்ரேல் நேற்று உறுதி செய்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இன்று உறுதி செய்தது.
அமெரிக்கா – இஸ்ரேல் வெற்றி
அயதுல்லா அலி கமேனி கடந்த 1989 முதல் ஈரானின் உச்சபட்ச தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் திட்டமிட்டப்படி அவரை கொன்று இஸ்ரேல் -அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது. அதேவேளையில் ஈரான் உயர்பதவியில் உள்ளவர்கள், அதிகாரிகள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால் ஈரான் பொதுமக்கள் சுரங்கத்தில் பதுங்கி உள்ளனர்.
The Iranian regime was warned. CENTCOM is now delivering swift and decisive action as directed. pic.twitter.com/nNDoDexH6g
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
அமெரிக்கா வார்னிங்
இதற்கிடையே தான் ஈரானுக்கு, அமெரிக்கா கடும் வார்னிங்கை வழங்கி உள்ளது. இந்த எச்சரிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்பு படைகள் சார்பில் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதிகளில் முக்கிய ராணுவ ஆபரேஷன்களை ஒருங்கிணைக்கும் CENTCOM வழங்கி உள்ளது.
அதில், ‛‛ஈரான் ஆட்சியாளர்களுக்கு வார்னிங் செய்கிறோம். CENTCOM இப்போது விரைவாகவும், அதிரடியாகவும், நேரடியான தாக்குதல்களை தொடங்கி உள்ளது'' என வார்னிங் செய்துள்ளது.
சீறிப்பாயும் ஏவுகணைகள்
மேலும் அந்த பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ஏவுகணைகளை சுமந்து செல்லும் வாகனங்களில் இருந்து தீப்பிழம்பை கக்கியப்படி ஏவுகணைகள் மின்னல் வேகத்தில் ஈரானை தாக்க விண்ணை நோக்கி பாய்கின்றன.
ஈரானை எடுத்து கொண்டால் பெரிய அளவில் தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகளை இடைமறிக்கும் கருவிகள் கிடையாது. இதனால் அமெரிக்காவின் தொடர் தாக்குதலால் ஈரான் பெரிய அழிவை சந்திக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications