சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!
ஈராக்கில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் பெண் ஒருவர்.
Recommended Video

பாக்தாத்: ஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்த யுசுப் பத்லே என்பவருக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவரது மனைவி கர்ப்பமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஆறு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை ஆகும்.
பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள், அதுவும் சுகப்பிரசவம் என பலர் ஆச்சர்யத்தையும், அக்குழந்தைகளுக்கும், அவரது தாய்க்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன் னர் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவின் இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.
இதேபோல், கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தது. அவற்றில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications