நாங்கள் பற்ற வைத்த நெருப்பு உங்களை பொசுக்கும்.. ஐஎஸ்ஐஎஸ் போஸ்டரால் பரபரப்பு

ரஷ்யாவில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு போஸ்டர் அடித்து அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மாஸ்க்கோ: ரஷ்யாவில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு போஸ்டர் அடித்து அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் பிரபல அர்ஜென்டினா அணி கால்பந்து வீரர் மெஸ்ஸி ரத்தக் கண்ணீர் வடித்தபடி இருக்கிறார். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ரஷ்ய அரசாங்கத்திடம் நீங்கள் எப்படி கால்பந்து போட்டி நடத்துகிறீர்கள் என்று பார்ப்போம் என சாவல் விடுத்து இருக்கின்றனர்.

ரஷ்யாவில் தலைநகர் மாஸ்க்கோவில் அடுத்த வருடம் ஜூன் மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இருக்கிறது. ஒரு மாதம் நடக்க இருக்கும் இந்த போட்டியில் 11 நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. மேலும் கால்பந்து போட்டிகளுக்கு உலகில் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் இந்த போட்டிக்கும் நிறைய மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ISIS has issued a poster to threat the football World Cup tournament

இதற்காக ரஷ்யா முழுக்க நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மைதானங்களை தயார் செய்வது, சுற்றுலா தளங்களை பராமரிப்பது என நிறைய விஷயங்களை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. கோடிக்கணக்கில் இந்தப் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களது இணையதளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரஷ்யாவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதில் அர்ஜெண்டினா அணி கால்பந்து வீரர் மெஸ்ஸியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் மெஸ்ஸி கண்களில் இருந்து ரத்தக் கண்ணீர் வருவது போன்றும் சித்தரித்து இருக்கின்றனர்.

இந்தப் போஸ்டரில் ரஷ்யா கால்பந்து உலகக் கோப்பைக்கான அதிகாரப் பூர்வ சின்னமும் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் "நாங்கள் பற்ற வைத்துள்ள நெருப்பு உங்களை பொசுக்கிவிடும்...பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று" என எழுதி இருக்கிறது. இந்த போஸ்டர் கால்பந்து ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+