For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இ மெயில் மூலம் கெடு விதித்து பத்திரிகையாளர் போலியின் தலையை துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ்.!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இ மெயில் மூலம் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலியின் பெற்றோருக்கு கெடு விதித்து பின்னர் அவரது தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் துண்டித்துள்ளது தெரியவந்துள்ளது.

சிரியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவர் ஜேம்ஸ் போலி. அமெரிக்காவின் குளோபல் போஸ்ட் பத்திரிகைக்காக பணியாற்றியவர் அவர். கடந்த 2 ஆண்டுகளாக அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

isis

இந்த நிலையில் ஈராக்கில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்று கூறி ஜேம்ஸ் போலியின் தலையை துண்டித்து அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.

இக்கொடூர படுகொலை குறித்து குளோபல் போஸ்ட் பத்திரிகையின் தலைமை செயல் அதிகாரி பிலிப் பால்போனி கூறியதாவது:

  • 2 ஆண்டுகளாக போலியை தேடுவதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம்.
  • போலியை கண்டுபிடிப்பதற்காக வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் ஒன்றை வாடகைக்கும் அமர்த்தியிருந்தோம்.
  • 2013ஆம் ஆண்டுதான் சிரியாவில் போலி பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
  • போலி பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இடம் அமெரிக்க அரசுக்கு தெரியும். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சில முயற்சிகளை மேற்கொண்டும் பார்த்தார்.
  • போலியுடன் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்ட ஐரோப்பிய பத்திரிகையாளர்கள், பணம் கொடுத்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
  • ஆனால் போலி அமெரிக்க நாட்டவர் என்பதால் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடியாக படுகொலை செய்தனர்.
  • கடந்த வாரம் புதன்கிழமையன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து போலியின் தலையை துண்டித்து கொல்லப் போவதாக எச்சரிக்கை இமெயில் வந்தது.
  • அதுகுறித்து உடனே அமெரிக்க அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அரசும் முயற்சித்துப் பார்த்தது.
  • ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அனுப்பி வைத்த இ மெயிலில் பணம் உட்பட எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலைத்தான் அவர்கள் எதிர்ப்பதாக கூறியிருந்தனர்.,
  • தற்போது போலியின் தலையை துண்டித்து அனுப்பியிருக்கும் வீடியோவில் மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளரையும் காட்டுகிறார்கள். அவரைத்தான் அடுத்து கொலை செய்யப் போவதாக கூறியுள்ளனர்.
  • போலி விவகாரத்தில் அமெரிக்க அரசுதான் வெளிப்படையாக என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும்.
English summary
The White House was aware of James Foley's location before his death claims the murdered journalist's former boss, who says he hired an international security firm to locate the kidnapped reporter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X