"8 போட்டா நோ, 7½ போடனும்" சீனாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற இவ்வளவு கடின டெஸ்டா..வியக்கும் நெட்டிசன்கள்
பீஜிங்: சீனாவில், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்காக வைக்கப்படும் டெஸ்ட் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் இவ்வளவு கடினமான டெஸ்டா? என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பைக்குகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு லைசன்ஸ் கட்டாயம். உலகம் முழுவதிலும் இத்தகைய நடைமுறைதான் இருக்கின்றது.
இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் சாலைகளில் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஓட்டுநர் செய்யும் தவறுகளே பெரும்பாலும் காரணமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

சீனாவில் டிரைவிங் லைசென்ஸ்
இதனால், விபத்துக்களை குறைப்பதற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதில் காணப்படும் பல்வேறு முறைகேடுகளை களைந்து தீவிர பயிற்சி மற்றும் நேர்மையான டெஸ்ட் வைத்து அதன்பிறகே லைசன்ஸ் வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர். கடுமையான சட்ட திட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சீனாவில், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்காக வைக்கப்படும் டெஸ்ட் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

zig-zag- இசட் வடிவில் டிரக்
அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் இது வியப்பையும், அதிர்ச்சியையும் ஒரு சேர கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இது தொடர்பாக ட்விட்டரில் தன்சு யேகன் என்ற யூசர் ஒருவர், 'சீனாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நிலையம்' என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் zig-zag- இசட் வடிவில் டிரக் காண்பிக்கப்படுகிறது.

வாயடைத்து போன நெட்டிசன்கள்
இதில் வெள்ளை நிற கார் ஒன்று முதலில் எட்டு போட்டு விட்டு அப்படியே அங்குள்ள டிரக்கில் ரிவர்சில் செல்கிறது. பிறகு மேடு, பள்ளம் என அனைத்து விதமான சவால்களான சூழலிலும் வாகனத்தை ஓட்டி திறனை நிரூபிக்கும் வகையில் இந்த சோதனை செல்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாயடைத்து போய் உள்ளனர். ஏனென்றால் நமது ஊரில் வெறும் 8 போட்டாலே லைசன்ஸ் எளிதாக எடுத்துவிடலாம்.

இவ்வளவு கடினமாக இருக்கிறதே
அதுவும் இடைத்தரகர்கள் மூலமாக பல முறைகேடுகளும் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், சீனாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வைக்கப்படும் டெஸ்ட் இவ்வளவு கடினமாக இருக்கிறதே என்று நெட்டிசன்கள் பலரும் வியந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்க்கான ஆடிஷன்
நெட்டிசன்கள் பலரும் இதைப்பார்த்தால் பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்க்கான ஆடிஷன் போல தான் தெரிகிறது என்று பதிவிட்டு இருக்கின்றனர். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இது மிகவும் கடினமான சோதனையாக உள்ளது. அவர்களின் பயிற்சி வியக்க வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசனோ தைவானிலும் இதேபோன்ற டெஸ்ட் தான் வைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications