For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிகுறி அற்றவர்களிடம் இருந்து கொரோனா பரவுமா.. உலக சுகாதார அமைப்பு புதிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஜெனிவா: கொரோனா வைரஸ் அறிகுறி அற்றவர்களிடம் இருந்து பரவுவது "மிகவும் அரிதானது" என்று தரவுகள் தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸை பரப்புவதில் அறிகுறியற்ற நபர்கள் பங்கு வகிப்பதாக கூறிய நிலையில் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தொடர்புத் தகவல்களில் (Contact tracing date) , அறிகுறியற்ற கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றவர்களுக்கு வைரஸைப் பரப்பிய சம்பவங்கள் இருந்தாலும், அவர்கள் புதிய தொற்றுநோய்களின் "முக்கிய காரணம்" ( "a main driver" ) அல்ல என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

எல்லாமே சென்னையில்.. ஷாக்! தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு 21 பேர் மரணம்! எல்லாமே சென்னையில்.. ஷாக்! தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு 21 பேர் மரணம்!

அறிகுறி அற்றவர்கள்

அறிகுறி அற்றவர்கள்

இந்த அறிவிப்பு மிக முக்கியமானது ஆகும். ஏனெனில் அறிகுறிகளை அனுபவிக்காத நபர்களிடையே ஒருவருக்கு ஒருவர் பரவுதல் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் என்றும் கொத்துக்கொத்தாக பரவலுக்கு வழிவகுக்கும் என்று ஆரம்பகால சான்றுகள் தெரிவித்தன. கொரோனா அறிகுறிகளை அனுபவிக்காத இளைஞர்கள் மற்றும் கொரோனா பாதித்தும் ஆரோக்கியமாக உள்ள மக்கள் மூலம் கொரோனாவால பிற மக்கள் பாதிக்கப்படுவதாக சந்தேகிக்கப்பட்டது.

இரண்டாம் நிலை இல்லை

இரண்டாம் நிலை இல்லை

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இப்போது தொடர்புத் தடமறிதல் (Contact tracing) மூலம் பெறப்பட்ட தரவை நம்பியுள்ளது என்று வளர்ந்து வரும் நோய்கள் மற்றும் ஜூனோசிஸ் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மிக விரிவான தொடர்பு தடமறிதலைச் செய்யும் நாடுகளின் பல அறிக்கைகள் எங்களிடம் உள்ளன. அவை அறிகுறியற்ற கேஸ்களை பின்பற்றுகின்றன. அறிகுற்றவர்களின் தொடர்புகளைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் அறிகுறி அற்றவர்களிடம் இருந்து இரண்டாம் நிலை பரிமாற்றத்தை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இது மிகவும் அரிதானது.

அறிகுறி அற்றவர்கள்

அறிகுறி அற்றவர்கள்

முன்பு நினைத்ததை விட அதிகமான அறிகுறியற்ற நோயாளிகள் இருக்கிறார்கள். பலருக்கு உண்மையில் லேசான நோய், மிகவும் லேசான நோய் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், அவை கோவிட் அறிகுறிகளை மேற்கோள் காட்டவில்லை, அதாவது அவர்களுக்கு இன்னும் காய்ச்சல் உருவாகவில்லை. எனினும் இந்த அறிவிப்பின் மூலம் அறிகுறி இல்லாதவரகள் "சமூக இடைவெளியில் இருந்து வெளியேற" அனுமதி அளித்துவிட்டதாக கருதக்கூடாது, ஏனெனில் நோய்த்தொற்றுடையவர்கள் அறிகுறிகளை அனுபவிப்பதற்கு முன்பு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்." என்று தெரிவித்தார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இதனிடையே சில மாடலிங் ஆய்வுகளில் 40-60% பரவல் மக்களிடமிருந்து அறிகுறிகள் இல்லாதவர்களிடம் இருந்து வந்ததாகக் கூறுகின்றன" என்று பிரவுன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் இன் உள்வரும் டீன் ஆஷிஷ் ஜா ட்வீட் செய்துள்ளார். சிங்கப்பூரின் கொரோனா வைரஸ் பணிக்குழு திங்களன்று நாட்டின் புதிய COVID-19 சோதனைகளில் பாதி சோதனை தரவுகளின் அடிப்படையில் அறிகுறியற்றது என்று நம்புவதாக தெரிவித்துள்ளது.

English summary
World Health Organization officials said that Data suggests it's "very rare" for coronavirus to spread through asymptomatics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X